agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Wednesday, February 21, 2018

9 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2018


இந்து சமய சேவை கண்காட்சி வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. நாம் சென்ற ஆண்டு தான் இதைப் பற்றி கேள்வியுற்றோம். சென்ற ஆண்டு மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. இந்த ஆண்டு கண்காட்சிக்காக காத்திருந்தோம். அப்போது தான் கீழ்க்கண்ட அழைப்பை கண்டோம். கண்காட்சி நாளுக்காக காத்திருந்தோம்.




இந்து சமய உயர்நெறிகளையும் தொன்மையான கலாசார மதிப்பீடுகளையும் விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.சுமார் 1000க்கும் மேற்பட்ட அமைப்புகள் இதில் பங்கு பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

இந்து மதம் என்றாலே கருணையற்றது; சேவை செய்யும் எண்ணமும், ஈரமும் இல்லாத மதம் என்ற பார்வை வெளிநாடுகளில் உள்ளது. அது உண்மை இல்லை. சத்யசாய் ஆன்மிக அறக்கட்டளை 3 மாவட்டங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளது. தெலுங்கு - கங்கை திட்டத்துக்கு வித்திட்டது அதுதான். ராமகிருஷ்ணா மடமும் எண்ணற்ற சேவைகளை செய்துள்ளது. ஆனால், இந்து தர்மப்படி சேவைகளை விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று கருதி இந்து அமைப்புகள், தாங்கள் செய்பவற்றை வெளியில் சொல்வதில்லை.


வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெற்றோர் ஆசிரியர் வணக்கம், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை உணர்த்தல் என்ற ஆறு உள்ளடக்கங்களில் இந்த கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது.






சுமார் 2 லட்சத்து இருபதாயிரம் சதுர அடி பரப்பளவில், 500-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் பிரம்மாண்டமாக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. அதில், ஈஷா யோகா மையம், சத்ய சாய், வாழும் கலை, காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இஸ்கான், சின்மயா மிஷன், பதஞ்சலி யோகா பீடம், ஸ்ரீ நாராயணி பீடம், ராமகிருஷ்ண மடம் உள்ளிட்ட பல அமைப்புகள் அரங்குகளை அமைத்திருந்தன.

கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் கேரள மாநில கலைகள், கர்நாடக மாநில கலைகள், சைவ ஆதீனங்களின் மடாதிபதிகள் நடத்தி வைத்த வள்ளி திருமணம், சேவையாட்டம், தெருக்கூத்து போன்றவை நிகழ்த்தப்பட்டன.


உள்ளே நுழைந்ததும் நம்மை அறுபத்து மூவர் வரவேற்றனர். அரங்கு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு இருந்தது.


அறுபத்து மூவர் ஆசி பெற்று உள்ளே சென்றதும், காஞ்சி சங்கர மடம் நம்மை வரவேற்றது. ஒவ்வொரு அமைப்பாக சென்று பார்த்தோம். விவேக தரிசனம் கொடுத்தார் விவேகானந்தர்.






கிராமங்கள் இந்தியாவின் உயிர்நாடி என்று படித்தது இந்த காட்சியைப் பார்த்து மீண்டும் நினைவுக்கு வந்தது. ஆனால் இன்று கிராமங்களும் உருக்குலைந்து நாகரிக போர்வை போர்த்தி வருகின்றது.என்ன செய்ய போகின்றோம் நாம்? என்ற பெருங் கேள்வியோடு நகர்ந்தோம்.



அவசியம் மலை யாத்திரை அமைப்பின் அரங்கைக் கண்டோம். பிரமாதமாக இருந்தது.உங்கள் பார்வைக்கு கீழே 











புதிதாக உறுப்பினராக சேர்பவர்களுக்கு சித்தர்கள் படம்,  அவசியத்தின் ஆன்மிக வழிகாட்டி என அருட்பிரசாதம் வழங்கினார்கள். மாதம் ஒரு மலையேற்றம் இவர்களது நோக்கம். அத்தனையும் தாண்டி பல ஆன்மிக சேவைகள் செய்து வருகின்றார்கள்.


அவசியம் பற்றி ....

அன்பே சிவமாய், அறிவே தவமாய் நம் முப்பாட்டன்களான சித்தர்களும், மகான்களும், ரிஷிகளும், முனிகளும், ஞானிகளும், நம் நலமான வளமான ஆரோக்கிய வாழ்விற்கும் தந்து சென்றவைகள் ஏராளம். நாம் அவர்களின் அடிசுவற்றை பின்பற்றும் சிறு தொண்டான சித்தர் மலை தரிசன யாத்திரைகள் அவர்கள் பணித்த பணியாக செய்துவருகிறோம். கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அறக்கட்டளையாக முறையாக பதியப்பட்டு இதுவரை பதினோரு வருடங்கள் 101 மலை தரிசன யாத்திரைகள் மூலம் சித்தர்கள் தவமிருந்து அற்புத ஆற்றல்கள் பெற்ற 141 மலை ஆலயங்களும், 228 அற்புதம் அருளும் சிவ, வைணவ, அம்மன் ஆலயங்களும் 168 சித்தர்கள், மஹான்கள், ஜீவசமாதிகள் தரிசனங்கள் பெற்று மக்களை மகிழ்வித்திருக்கிறோம். இந்த பக்தி தொண்டுகளின்மூலம் மக்களை இணைத்து ஒற்றுமை உணர்வுடன், உதவியுடன் பல்வேறு சமுதாய சேவைகளையும் செய்துவருகிறோம்...மலையடிவார கிராம ஏழை மாணவர்களுக்கு படிப்பு, கல்வி உதவிகளும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கு அன்னதானம், ஆடை தானம், உபகரணங்கள் வழங்குதல், இயற்கையை பாதுகாக்க மரம் நடுதல், மலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றுதல், ஆலய உழவாரப்பணி, மற்றும் பக்தி தொண்டாக, பண்பாடு வளர்க்க ஆன்மீக சத்சங்கங்கள், திருவிளக்கு பூஜைகள், யாகங்கள், நிகழ்த்தி வருகிறோம். இறைவன் தந்த அருட்கொடையான இந்த அற்புத இயற்கையை போற்றி பராமரிக்கும் ஆற்றல்மிக்க அருட்பணியில்....அவசியம் 


அன்னையின் அருள் 







வள்ளலார் அரங்கை கண்டோம். திருஅண்ணாமலையில் இருந்து வந்து அரங்கு அமைத்து உள்ளார்கள். அருட்பெருஞ்ஜோதி அன்பு,அருள்,ஆனந்தம் உணர்த்தும் ஆழ்நிலை தியான முகாம்
🌸ஞான சத்சங்கம்
🌸தியான நுட்பங்கள்
🌸3நாள் மெளனம்
🌸ஜோதி தியானம்
🌸திருஅருட்பா பாராயணம்
🌸யோகாசனம்
🌸சுவாச பயிற்சி
🌸காயசித்தி மூலிகை இரகசியங்கள்
போன்ற அருள் நிகழ்வில் கலந்து பேரின்பத்தை ருசிக்க அனைவரையும் தயவுடன் அழைக்கிறார்கள். வள்ளலார் சன்மார்க்க ஞானமுரசு சன்மார்க்க-ஆன்மீக-தமிழ் மாத இதழ் வெளியிட்டு வருகின்றார்கள்.






                                                       லட்சுமி நரசிம்மர் தரிசனம்


நம் குழுவின் அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வரும் திரு.சந்திரசேகரன் அவர்கள் கண்காட்சிக்கு வந்து தூள் கிளப்பி விட்டார்.


                                                             அம்மனின் தரிசனம் 



அய்யா வைகுண்டர் துணை. அவரின் அருள் பரப்பும் அரங்கில் ஆனந்தமே கிடைத்தது.
அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது. அய்யாவழி புராணத்தின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானை விளங்குகிறது. அகிலம் கூறும் ஒருமைக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்கும் ஏகம், வைகுண்டராக அவதரிப்பதால் அவரை மையமாகக் கொண்ட ஓரிறைக் கோட்பாட்டை அய்யாவழி வலியுறுத்துகிறது.

அய்யாவழி புராண வரலற்றின்படி அய்யா வைகுண்டரின் தூல உடலையும், சூட்சும உடலையும் தாங்கி சம்பூரணத்தேவன் என்னும் தெய்வ லோகவாசி தாமரைகுளம் என்னும் ஊரில் பிறக்கிறார். வைகுண்ட அவதாரம் வரை அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. இவர் 'முடிசூடும் பெருமாள்' என்று வரலாற்றில் அறியப்படுகிறார்.








            வேலும் மயிலும் சேவலும் துணை. இன்றைய சஷ்டியில் முருகப் பெருமான் தரிசனம்.




ஷண்முக நாயகன் தோன்றிடுவான்
சிவ ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம்
கொடும் காலத்தைக் காலனை மாற்றிடலாம்!

ஆனந்த மாமலர்ச் சோலையிலே
மன ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே
எழும் நாம சங்கீர்த்தன ஊற்றினிலே!

பக்குவமாம் தினைக் காட்டினிலே
அவன் பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே
அருள் மேவும் அகத்தியன் பாட்டினிலே!

தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே
அவர் சுற்றிச் சுழன்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினம் தொழும் வானத்திலே
தவ ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே!

ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே
பொருள் ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக் கடப்பவர் பக்தியிலே
தெய்வ உண்மையைக் காண்பவர் சக்தியிலே!

வேதாந்த தத்துவ ஸாரத்திலே
அலை வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே
ஆதார குண்டலி யோகத்திலே
பரமாத்ம ஜீவாத்ம வைபோகத்திலே!

அன்பர்க்கு இயற்றிடும் சேவையிலே
உயர் அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே
காணும் யாவும் ஒன்றென்றுணர் காட்சியிலே!

நண்ணும் இயற்கை அமைப்பினிலே
ஒளி நட்சத்திரங்கள் இமைப்பினிலே
விண்ணில் விரிந்துள நீலத்திலே
மயில் மேல்வரும் ஆனந்தக் கோலத்திலே!

தேகவிசாரம் மறக்கையிலே
சிவ ஜீவவிசாரம் பிறக்கையிலே
ஆகும் அருட்பணி செய்கையிலே கங்கை
ஆறு கலந்திடும் பொய்கையிலே!

மானாபிமானம் விடுக்கையிலே
தீப மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானுபூதி உதிக்கையிலே
குரு நாதனை நாடித் துதிக்கையிலே!

ஷண்முக நாயகன் தோன்றிடுவான்
சிவ ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம்
கொடும் காலத்தைக் காலனை மாற்றிடலாம்!.


தமிழ்த் தாயை வணங்கினோம். அரங்கின் மற்றொரு பகுதியில் தற்போது 



அட ! நம்ம நால்வரின் பாதையில் குழு. சொல்லவும் வேண்டுமா?




சைவம் தழைக்க தொண்டாற்றுவோம் என்பதையே முழுமுதற் பொருளாக கொண்டு இயங்கி வருகின்றது நால்வரின் பாதையில் குழு.





நமது "நால்வரின் பாதையில் ..." யாத்திரை குழு 09.03.2018 அன்று பல படிகளை தாண்டி , பல தடைகளை தகர்த்து வெற்றிகரமாக ஐந்தாண்டுகளை கடந்து, அழகாக அமைதியாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது .. இதை குறிக்கும் பொருட்டு ஆண்டு விழாவும் & ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறவுள்ளது.திருச்சிற்றம்பலம்.

வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும்.





பசு மாடு பற்றி கண்டோம். அருமையான செய்திகள். என்ன ஒரு நேர்த்தி. எல்லா உயிர்களையும் ரட்சிக்க வேண்டும் என்பது பொது விதி. அதிலும் ஆ இனங்களை ஒரு மனிதன் நல்ல முறையிலே பாதுகாத்து, உயர்வான முறையிலே உணவு கொடுத்து, நன்றாக பராமரித்து, ஒரு பசுவை நல்ல விதமாக , அதிலும் இனி எந்த பயனும் இல்லை என்று ஒதுக்கப்படும் பசுவினை கொலை களத்திற்கு அனுப்பாமல், எவர் ஒருவர் நன்றாக, உண்மையாக, ஆத்மார்த்தமாக, தன்னுடைய குழந்தையைப் போல் பராமரிக்கின்றாரோ, அவருக்கு இதுவே கடைசி பிறவி என்று நம் தர்மம் சொல்கின்றது.ஒரு பசு மாட்டை உண்மையாக பராமரித்து, கரை சேர்த்தால், அவர் பனிரெண்டு சிவாலயங்களை எழுப்பி கலச விழா செய்த பலனை அடைவான் என்றும் கூறுகின்றார்கள்.


                             அவசியத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது


                                நால்வர் பொற்றாள் நம் உயிர்த்துணையே


அடுத்து சித்தம் பேசும் நம் ஜீவ அமிர்தம் அரங்கு. நித்தம் ஒரு ஜீவ அமிர்த காலை வணக்கத்தோடு.அப்பப்பா. நீங்களே பருகிப் பாருங்கள்.

இந்த உலகியலில் மனித இனம் எல்லா உயிர்களை விட மேலான மகத்துவம் நிறைந்த ஒன்றாகும் என்பது நீங்கள் அறிந்ததே. எல்லா உயிர்களிடமும் ஒன்றி பழகி, அதனையும் தன் பணிகளுக்காக பயன்படுத்தி, அந்த விலங்குகளையும் மதித்து விழா எடுத்த மனிதர்கள் நம் தமிழர்கள்! அத்தனை அற்புத ஆற்றல் கொண்ட இந்த மனித இனத்திற்கு ஞானத்தை இயல்பாக கற்று தந்தவர்கள் தமிழர்கள். இன்று இந்த உலகத்தாரால் தமிழ் மொழி முதன்மையானது என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் இந்த அற்புதம் நிறைந்த இயல்பான தமிழினை மதிக்காத மனிதர்கள் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது கண்கூடு. எல்லா உயிர்களின் உணர்வுகளை புரிந்து வாழும் பண்பினை பெற்றதால் ஒவ்வொரு உயிரினத்தை கொண்டு வீரக்கலைகள், வாணிபம், அறுபத்தி நான்கு கலைகள், வாழ்க்கைக்கு தேவையான மூலிகைகள் கொண்ட சித்த மருத்துவம், இரசவாதம், வேதியலில் உள்ள தனிமங்கள், வாழ்வியல் முறை, இயற்கை வழிபாடு என அனைத்தும் கண்டறிந்து வாழ்ந்த தமிழன், இந்த உலகத்தின் வழி காட்டி மனிதன் என்பதில் மாற்று கருத்து இருக்க இயலாது! இப்படி இயல்பாக
வாழ்ந்த தமிழர்களிடம் இயற்கை விதிகளுக்கு மாறாக, சில சடங்கு சம்பிரதாயங்களை புகுத்தியது யார்? சமயம் சாதியைச் சொல்லி உயர்வு தாழ்வு கற்பித்து கொண்டு வாழ்வில் பிரிவினை உண்டு செய்தவர் யார்? யாருக்கெல்லாம் படிப்பு சுதந்திரம் இருந்தது? எழுத்து சுதந்திரம் இருந்தது? எப்போது தமிழரின் வரலாற்றில் திணிப்புக்கள் அரங்கேறியது என்பதை உணராமல், ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாமல் எதை எதையோ பேசி வீழ்ந்து போகும் சமூகமாக மாறியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. இன்றும் சில அற்பர்கள் இந்த மொழியை மறைத்து விட்டால் இனத்தை அழித்து விடலாம், விஞ்ஞானத்தை புகுத்தி விட்டால் இயற்கை விவசாயத்தை அழித்து விடலாம், என்று திட்டம் போட்டு வெகு காலமாக அரங்கேற்றி வருகிறார்கள் என்பது சத்தியம்.
கருணையும், தயையும் இயற்கையாக கொண்டவனே நம்
தமிழன். இந்த தமிழையும், தமிழரையும் அழிக்க நினைப்பவர்கள், மதிக்காதவர்கள் அழிந்தே போவார்கள், ஏன் இந்த உலகமே அழிந்து போகும் என்பது திண்ணம்! இங்கு பக்தியின் பெயரால், மத சடங்கு சம்பிரதாயத்தின் பெயரால் தமிழ் இருந்த இடத்தில் எல்லாம் பிற மதங்கள் தங்களுடைய மதத்தினை புகுத்தி கொண்டு தமிழை விட நாங்களே முன்னோடிகள் என்று ஒப்பாரி வைக்கின்றார்கள் என்பது கேலிக்கூத்து!. இந்த ஆதாய அரசியல் மனிதர்கள், எல்லோர் காலிலும் விழுந்து இந்த நாட்டையே அடகு வைத்து விட்டார்கள். தமிழை படிக்காத, தமிழை போற்றாத, தமிழுக்காக பொங்கி எழாதவர்கள் ஆட்சியில் இருப்பது வீரத்தமிழனுக்கு அழகல்லவே!
இன்று தமிழின் தொன்மை வாய்ந்த பல கல்வெட்டுக்கள் கிடைத்தாலும் அதனை மறைக்கவே முயற்சி செய்கிறார்கள். தமிழினை மறைத்தால் தெய்வத்தை மறைப்பதற்கு சமமாகும் என்பதனை இவர்கள் உணரவில்லை. இப்படியே நாம் விட்டு விடக்கூடாது உறவுகளே! விழித்தெழுங்கள்! இனியும் இங்கு பேதம் காணாமல் இந்த மண்ணில் பிறந்த நீங்கள் எல்லோரும் உண்மைக்கு எதிராக பேசாமல், தமிழுக்கு எதிராக நில்லாமல் ஒன்று பட்டு இயற்கையாக வாழுங்கள்.
நிலாவில் வாழ ஆசைப்படுவது விஞ்ஞானம்! நிலத்தை உழுது உழைத்து, எவருக்கும் அடிமை இல்லாமல் வாழ்வது தான் உண்மையான மெய்ஞானம்! பயிர் தொழிலை உலகுக்கு கற்று தந்த தமிழை போற்றுங்கள். விவாசயத்தை மதியுங்கள்! உணவு தருபவனே உயர்ந்த இனமாக தானே இருக்க இயலும், இந்த நாட்டில் உழுபவனுக்கு அப்படி மதிப்பு இருக்கிறதா? அறைகுறை ஆடை, தலைவிரிக்கோலம் இவை தான் நாகரீகம் என்று சொல்லப்படுகிறது. பணத்திற்காக நடிக்கும் மனிதர்களை நிஜமான வாழ்க்கையில் தலைவர்களாக பார்க்கும் அவலம்! அந்த செய்தியை பரப்பும் கேடு கெட்ட ஊடகம்!!
கோவில் பற்றி எரிகின்றது, நாட்டிற்கு கேடு என்று புரளி பேசும் பக்தி! எத்தனை காலம் அப்பாவி மக்களை பக்தியை செல்லி ஏமாற்ற முடியும்? தீ வைத்தவன் யார்? இதற்கு ஆதரவு தெரிவித்து பேட்டி அளிப்பவனை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் தெரிந்துவிடும்! பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுபவர்கள் யாரென்று மக்கள் மன்றத்திற்கு தெரியும். இந்த பக்தியினை நம்பி எல்லோரும் கருணையிருந்தும் கட்டுண்டு வாழ்கிறீர்கள் என்பதே உண்மை.
வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் இன்று பல மிருகங்கள், வேறு இனமுள்ள மிருகங்களுக்கு உதவி செய்வதை காணொளியாக காண்கிறோம், அந்த பண்பு கூட இல்லாமல் உற்ற பெற்ற உடன் பிறந்த, நட்பு என பலவற்றிலும் மனிதர்கள் உண்மையாக இருப்பதில்லை, உதவுவதுமில்லை. கெடுப்பதிலே முதலில் நிற்கிறார்கள். இங்கு நாம் நன்றாக வாழ்ந்தாலும் நம்மை வாழ விடாமல் பொறாமையால், கர்வத்தால், வஞ்சனையால் அழிக்க நினைப்பவர்கள் நம் உறவுகளும் நட்புகளும் என்பதனை மறுப்பதற்கில்லை. உறவுகள் என்னும் காவாலிகள் தங்கள் ஆசையினால் பணத்திற்காக, நிலத்திற்காக, தங்களை நம்பியிருந்த படிப்பறிவில்லாத அப்பாவி உறவுகளை ஏமாற்றுவதை கண்டு இருப்பீர்கள், ஆதலால் இங்கு நாம் பிரிக்கப்பட்டோம்! ஒரு புறம் சாதி சமயத்தால் பிரிக்கப்பட்டு வேதனை படுகிறோம்! இப்படித்தான் இயற்கையான வாழ்வை நாம் மறந்து, நல்ல உணவினை பண்பாட்டை இப்படி இழந்து, பக்தியின் பெயரில் பூசை, பரிகாரம், ஹோமம் எல்லாம் செய்து ஏமாற்றம் கண்டு வருகின்றோம்! ஹோமமும், பரிகாரங்களும் நூதன ஏமாற்றம் தான் உணருங்கள்! நேரம் குறித்து, லக்னம் பார்த்து திருமணம், புதுமனைவிழா, காதணி விழா எல்லா சுப நிகழ்ச்சியும், அசுப நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஆனால் இந்த திருமணங்களுக்கு பரிகாரம், ஆலய வழிபாடு எல்லாம் செய்து, புரோகிதருக்கு பணம் கொடுத்து, நம்பிக்கைக்கு வரதட்சணை கொடுத்து செய்கிறார்கள், ஏன் எத்தனை விவாகரத்துகள் நடக்கின்றது? நேரம் குறித்தவர் தானே தப்பு செய்தார் என்று நீங்கள் சண்டையிடப்போவதில்லை, அவரை கேட்டால் அதற்கும் ஓர் பரிகாரமே சொல்வார்கள். தங்களை தாங்களே உயர் வகுப்புகள் என்று சொல்லி கொள்ளும் மனிதர்களின் சமூகத்தில் தான் இந்த விவகாரத்துக்கள் அதிகம் என்பது உண்மை!
இப்படி இந்த தமிழ் பண்பாடு கலாச்சாரம் எல்லாவற்றையும் அழிக்க வேண்டும் என்பதற்காக ஊடகங்களில் நாடகம், சில எரிச்சலூட்டும் ஷோக்கள், இளம் தலைமுறையை கெடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆதலால் இயல்பாக நாம் பழமையான முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியலை கடைபிடித்தால் நோயின்றி, உணர்வுடன் வளத்துடன் வாழலாம். இவ்வாறு நாட்டு நலனின் மீது அக்கறை ஏற்பட்டு இறைவனை வணங்கினால் சித்தர்கள் மட்டுமே சிந்தையில் நிற்பார்கள். உண்மையே இல்லையா இறைவா, இப்படி நடக்கிறதே என்று சிந்திக்க போனால் அந்த பாதை உங்களை அழைத்து வந்து சேர்க்கும் இடம்தான் சித்தாந்தம்! நம் புண்ணிய பூமியில் அனைத்தும் கண்டறிந்த சித்தர்களே நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும், வேறு எவராலும் இருக்க இயலாது என்பதே சத்தியம்! நல்ல வாழ்வை வாழ்வோம்! இயற்கையாக வாழ்வோம்! இனிய ஜீவ அமிர்த காலை வணக்கம்!










ஏற்கனவே நம் ஜீவ அமிர்தம் பற்றி தனிப் பதிவு அளித்துள்ளோம். மீண்டும் ஒருமுறை மீள்பதிவாக அளிக்கின்றோம்.




அடுத்து நாம் சென்றது பழந்திருக்கோயில்கள் சங்கம் அரங்கம்.











மிகவும் நேர்த்தியாக அரங்கை அமைத்து இருந்தார்கள். பழந்திருக்கோயில்களை பாதுகாப்பதே தலையாய கடமையாய் இவர்கள் தொண்டாற்றி வருகின்றார்கள். வரும் மார்ச்சு மாதம் மிகப் பெரிய அளவில் அன்னதானம் செய்ய உள்ளார்கள். அழைப்பிதழ் பார்த்து தொண்டுள்ளம் கொண்டோர் உதவி செய்தல் நன்று.




சமய பயிற்சி வகுப்புகள் மாதம் தோறும் நடத்தி வருகின்றார்கள்.



வழிபாடாக தற்போது 191 நிகழ்வை முடித்துள்ளார். ஒரு வழிபாடு என்றாலே நமக்கு கடினமாக உள்ளது. 191 என்றால் நீங்களே பாருங்கள். அனைத்தும் மிக மிக பழமையான திருக்கோயில்கள்.


கண்காட்சியின் நிறைவு நாளில்  வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தை முன்வைத்து விருஷ வந்தனம் மற்றும் நாக வந்தனம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்டர்நேஷனல் வள்ளலார் பவுண்டேஷன் சார்பில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவரும் மரக்கன்று வாங்கும்போது கற்பூரம் ஏற்றி, இறைவனை வழிப்பட்டு வாங்கிச் சென்றனர். இவை கடந்த 4-ம் தேதி நடந்த வள்ளித் திருமணம் நிகழ்ச்சியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட மரக்கன்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவின் நிறைவாய், ஆன்மிகத்தின் சிறு துளியைத் தான் இங்கே நாம் தொட்டு காட்டியுள்ளோம். இது போல் நூற்றுக்கணக்கான அமைப்புகள், அவசியம் டிரஸ்ட், நால்வரின் பாதையில், பழந்திருக்கோயில்கள் சங்கம், ஜீவ அமிர்தம், வள்ளலார் என அனைத்தும் தன சேவைகளை சிறப்புற செய்தும், நமக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றார்கள். இந்த அமைப்பில் உள்ள சேவை மனப்பான்மை கொண்டவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என அனைவர்க்கும் நம் தளம் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீள்பதிவு:

"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html

No comments:

Post a Comment

Trending