agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Tuesday, February 13, 2018

18 சித்தர்கள் வாழ்ந்த காலமும் அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடமும் ...

தமிழர்கள்  வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் அதில் சித்தர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றே கூறலாம். இன்றைய அறிவியலாளர்களால் கண்டறிய முடியாத பலவற்றை அவர்கள் அன்றே கண்டறிந்துள்ளனர். கடவுள் நம்பிக்கையிலும் சரி ஞானத்திலும் சரி அறிவியலிலும் சரி சித்தர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி பல சிறப்புக்கள் பெற்ற 18 சித்தர்கள் வாழ்ந்த காலமும் அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடம் குறித்தும் பார்ப்போம் வாருங்கள்.



அகத்தியர்:
சித்தர்களில் முதன்மையானவராக அறியப்படுகிறார் அகத்தியர். மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 4 யுகம் 48 நாட்கள் வாழ்ந்துள்ளார். பழங்காலத்தில் அனந்தசயனம் என்றழைக்கப்பட்ட இன்றைய திருவனந்தபுரம் பகுதியில் இவரின் ஜீவ சமாதி உள்ளதாக கூறப்படுகிறது.
இடைக்காடர்:
புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 600 வருடம் 18 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளதாகவும், இடைக்காட்டூரில் உள்ளதாகவும், திருவிடைமருதூரில் உள்ளதாகவும் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
போகர்:
வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 300 வருடம் 18 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி பழனியில் உள்ளதாக கூறப்படுகிறது.
திருமூலர்:
புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி திருவாவடுதுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் இன்று சதுரகிரி மலையில் வாழ்ந்து விழுகிறார் என்றும் கூறப்படுகிறது.
கொங்ணர்:
சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் சமாதி திருப்பதியில் உள்ளதாக கூறப்படுகிறது.
பதஞ்சலி முனிவர்:
பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 5 யுகம் 7 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி சிதம்பரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
காக புஜண்டர்
இவர் பல யுகங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவரின் ஜீவ சமாதி திருச்சியில் உள்ள உறையூரில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிலர், இவர் அவிட்டம் நட்சத்திரமாக மாறிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.
கமலமுனி:
வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 4000 வருடம் 48 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி திருவாரூரில் உள்ளதாக கூறப்படுகிறது.
குதம்பை சித்தர்:
ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 1800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி மயிலாடுதுறை உள்ள மாயூரநாதர்கோயிலில் உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமுனி:
ஆவணி மாதம் மிருகசீருஷம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர்800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி திருவரங்கத்தில் கோயிலில் உள்ளதாக கூறப்படுகிறது.
கோரக்கர்:
கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 880 வருடம் 11 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி பொய்கை நல்லூரில் உள்ளதாக கூறப்படுகிறது.
தன்வந்திரி:
ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி வைத்திஸ்வரன் கோயிலில் உள்ளதாக கூறப்படுகிறது.

நந்தீஸ்வரர்:
வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 700 வருடம் 03 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி காசியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மச்சமுனி:
ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
வான்மீகர்:
புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி எட்டுக்குடியில் உள்ளதாக கூறப்படுகிறது.
ராமதேவர்:
மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி மதுரை அருகே உள்ள அழகர் மலையில் உள்ளதாக கூறப்படுகிறது.


பாம்பாட்டி சித்தர்:
கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி சங்கரன்கோயிலில்உள்ளதாக கூறப்படுகிறது.

கருவூரார்:
சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 300 வருடம் 42 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி கரூரில் உள்ளதாக கூறப்படுகிறது

மேலும் ஒவ்வொரு சித்தர்களை பற்றிய விரிவான தகவல்கள் தொடரும் ...

No comments:

Post a Comment

Trending