agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Tuesday, February 5, 2019

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! tut மறுபதிவாக!!!

அகத்தியர்

அன்பின் ஆழம் மூலம் நமக்கு கருணை மழை பொழிந்து வரும் சித்தர். அகத்தியரை வழிபட நாம்
எத்தனை பிறவிகள் எடுத்து வந்தோம் என்று நமக்குத் தெரியாது, புல்லாகி பூடாகி புழுவாகி மரமாய்
இதோ இந்த மனித பிறவியில் நுழைந்திருக்கும் நாம் குரு வழிபாடு, சித்தர்கள் பூஜை என்று செய்து வருகின்றோம். நாம் மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் மகரிஷிக்கு செய்து வருகின்றோம். வருகின்ற புதன் கிழமை  அன்று வருகின்ற ஆயில்யம் மகா குருபூஜை. இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்து ஒருங்கே தர முயற்சிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகே நடைபெறும் அகத்தியர் பூசையில் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.


1. பஞ்சட்டி அகத்தீஸ்வரர் கோவில் 

 அகத்திய முனிவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். (இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி) அதுவே இத்தலப் பெயரானது. அந்த யாகத்துக்கு அசுர சக்திகளும், தீயசக்திகளும் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் தேவியைத் துதித்து காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மஹா யந்திரத்தை தமது கையாலே பிரதிஷ்டை செய்தார். அம்பாளை இப்படி திரிநேத்ரதாரணியாக அதாவது முக்கண்ணுடையாளாக இந்தத் தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். 

முதலில் பஞ்சட்டி அகத்தீஸ்வரர் தீருக்கோயில் குறிப்புகளும், பூசை விபரங்களும். இத்தலத்து ஈசன், அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கின்றார். அகத்தியர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பே இங்கு ஈஸ்வரன் லிங்க வடிவில் கோயில் கொண்டிருந்தாராம். அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் அகத்தீஸ்வரர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படலானார். லிங்கத்தின் இடதுபாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை ஒரு ரூபமான தோற்றத்தில் வைத்து சிவசக்தி சொரூபமாக அகத்திய முனிவர் பூஜித்துள்ளார்.

அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில் அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரும் என்றும், பிறவிப்பயனைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட கோயியிலில் நடைபெற உள்ள குரு பூஜை அழைப்பு கீழே. 




பஞ்ஜேஷ்டி அருள்மிகு  ஆனந்தவல்லி  சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் நிகழும் விளம்பி ஆண்டு மார்கழி மாதம்  11ம்நாள் 26/12/ 2018  புதன்கிழமை  காலை 10 மணி அளவில் ஸ்ரீ அகஸ்தியர் ஜயந்தி விழாவை முன்னிட்டு  ஸ்ரீ அகஸ்திய பெருமானுக்கு  சிறப்பு மஹா அபிஷேகம்  சிறப்பு  அலங்காரம்  பல வகையான  வாசனை மலர்களால்  சிறப்பு மலர்வழிபாடு  மற்றும் அன்னப்ரசாதம் விநியோகம்  நடைபெற இருக்கிறது। அனைவரும்  வருக  அகத்தீசன்  அருள் பெருக


அடுத்து நாம் காண இருப்பது பனப்பாக்கம் மாயூரநாதர் கோயிலில் அருள் பாலிக்கும் அகத்தியர் தரிசனமும், ஆயில்ய ஆராதனையும். பனப்பாக்கம் அகத்தியர் கோயிலில் நடைபெற்ற 108 கலச பூஜை பற்றியும், பனப்பாக்கம் திருத்தல மகிமை பற்றியும் ஏற்கனவே பதிவிட்டுள்ளோம். தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்னர் அங்கே உழவாரப்பணி செய்தோம் மீண்டும் ஒருமுறை மீள்பதிவாய் பதிவின் இறுதியில் கண்டு மகிழவும்.

2. பனப்பாக்கம் ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் 



வேலூர் மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீமாயூர நாத ஆலயத்தில எழுந்து அருள் புரியும் ஸ்ரீ லோப மாத சமேத ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 26/12/18 அன்று  மாலை 6 மணி முதல் ஆயில்ய நட்சத்திர பூஜை விழா நடைபெற உள்ளதால் அனைவரும் வருக ஐயன் அருள் பெறுக

அடுத்து நாம் காண இருப்பது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்.


அடுத்து நாம் காண இருப்பது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்.

3. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் 


இறை நேயர்களே.




 கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற மகான்கள், ஞானிகள் தவம் புரிந்துள்ளனர்.அவர்களில் சைவத்தை பரப்புவதில் சிறந்தவரும் 18 சித்தர்களில் முதன்மையானவருமான  ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் மார்கழி மாதம் 20-ம் நாள் (26-12-2018) புதன்கிழமை ஆயில்ய நட்சத்திர தினமான அன்று காலை விசேஷ ஹோமம் ,அபிஷேகம், அன்னதானம், மற்றும்  மாலை சித்தர் திருவீதி உலாவும் நடை பெற உள்ளது.







பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கும்பமுனி அருள் பெற வேண்டுகிறோம்.


5. திருச்செந்தூர் அகத்தியர்  பெருமான் 


திருச்செந்தூரில், நமது குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு மார்கழி மாத மஹாஆயில்யம் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு வரும் 26/12/2018 புதன்கிழமை அன்று மூலிகை பொருட்களாலும், மூலிகை சார்ந்த பச்சை வர்ண மலர்களாலும்,அபிஷேகம்,அலங்காரம், ஆராதனைகள் மற்றும் அன்னதானம் அனைத்தும் சிறப்பாக நடைபெற உள்ளது. ஏற்கனவே இவரைப் பற்றி தனிப்பதிவு அளித்துள்ளோம். மீண்டும் ஒரு முறை பார்க்கவும்.


6. திண்டுக்கல் - அகஸ்தியர்புரம் அகத்தியர் ஜெயந்தி: சர்வரோக நிவாரணம் யாகம்

18 சித்தர்களில் முதலாவது சித்தரான அகத்திய மாமுனியின் ஜெயந்தி விழா வருகிற டிசம்பர் 26 ம்தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை உலக சித்தர்கள் தினம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விழா திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வெள்ளி மலை அடிவாரம் (தியானப்பாறை) ஸ்ரீ அகஸ்தியர் மகரிஷி ஒளி தேக ஷேத்ரம் "அகஸ்தியர்புரத்தில் நடக்கிறது.  அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான மார்கழி ஆயில்யமான டிச. 26 காலை 9 மணிக்கு குரு ஓரையில் அகஸ்தியர் ஜெயந்தி விழா மற்றும் பூமி( பிரித்வி ) தோசம் நிவாரணம் யாகம், சர்வரோக நிவாரணம் யாகம் சிறப்பாக நடக்க இருக்கிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை அகஸ்தியர் "பெருமாள்" வெள்ளி மலை கோவில் டிரஸ்ட் செய்து வருகிறது.

தொடர்புக்கு: : 9942887641, 9442029945 , 9786395006 , 9786834050

பஸ் ரூட் : திண்டுக்கல் To  அகஸ்தியர்புரம் 
காலை 6:15,9:15, மதியம் 12.15 மாலை 4.20 இரவு 10.20 

திண்டுக்கல் To சிறுமலை 
காலை 4.35,5.30,8.00,9.15,10.00,10.30, 10.40, 11.30 மதியம் 1.20.

7. தோகைமலை அகத்தியர் ஆலயம்.

தோகைமலையில் உள்ள அகத்தியமுனிவருக்கு வரும் புதன்கிழமை 26.12.2018 அன்று குருபூஜை நடைபெறுகிறது,காலை 8.0 மணிக்கு தமிழ்முறைப்படி யாகவேள்வியும்,21 வகை சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது,குருஅருளும் திருவருளும் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்..



8. கும்பமலையில் அகத்திய மாமுனிக்கு குருபூஜை 

கீழே இணைத்துள்ள அழைப்பிதழை மேலும் விபரங்களுக்கு சரி பார்க்கவும்.



9. வேதாரண்யம் அகத்தியன் பள்ளியில் நடைபெற உள்ள பூஜை தகவல் கீழே


10. மருதமலை ஐ.ஓ.பி  காலனியில் நடைபெற உள்ள பூஜை தகவல்










நமக்கு கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில் 

                           ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம் 

என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும். 

இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக ( facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.



நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

No comments:

Post a Comment

Trending