agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Saturday, February 16, 2019

ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவர்
        அம்மம்மா வெகு தெளிவு அவர் வாக்குத்தான்
அகத்திலுறை பொருளெல்லாம் வெளியாய்ச் சொல்வார்
         அவர்வாக்கு செவிகேக்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
         அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின்அடையாளம் பொதிகையே மேரு
         அவர்மனது மவரைப்போல பெரியோருண்டோ?


என்று அகத்தியம் பற்றி கூறியுள்ளார் காகபுசுண்டர். இன்றைய பதிவில் அகத்தியம் பற்றி சிறிது பேச விரும்புகின்றோம். சத் குருவாகவும், குரு முனியாகவும், ஒளி ரூபமாகவும் பொதிகை வேந்தராகவும், தீபச்சுடராகவும், அகத்தீயை தந்து நம்மை உய்விப்பவராகவும், ஆறுமுக சீடராகவும், செந்தமிழ் முனியாகவும், மறை நான்கும் அறிந்தவராகவும், வீடு பேறு அளிப்பவராகவும் நம் அகத்திய பெருமான் விளங்குகின்றார்.

மகான்களின் விழியில் நாம் இருப்பது நாம் செய்த பெரும் புண்ணியம். அந்த வகையில் நம் தளத்திற்கு முருகனின் அருளும், சித்தர்களின் அருளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்பது கண்கூடாக தெரிகின்றது. பிறப்பு,இறப்பு என்ற எல்லைகளை உடைத்தவர்கள்தான் சித்தர்கள். நம் அகத்திய பெருமானும் அப்படி தான். இன்றும் ஒளி வடிவில் நம்மை ஆட்கொண்டு வருகின்றார், அதனால் தான் முதலாமாண்டு அகத்தியர் பூசையில் 108 தீபமேற்றி வழிபாடு செய்தோம். அடுத்து அவரே நம்மை மாதந்தோறும் முன்னோர்களுக்கு மோதக தீபமேற்ற அருள் செய்துள்ளார். இரண்டாமாண்டு அகத்தியர் ஜெயந்தியில்  நாம் 108 தீபமேற்றி கொண்டாடினோம். இதற்கு மேல் நமக்கு என்ன வேண்டும்? அகத்தியரின் அருட்பார்வை நமக்கு ஒளி வடிவில் கிடைத்து வருகின்றது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 27 ம் தேதி நடைபெற்ற ஆயில்ய பூசை நிகழ்வுகளை இங்கே காட்ட விரும்புகின்றோம்.

அன்றைய பூசை மாலை நடைபெற்றது.








பஞ்சாமிர்தம் தயார் செய்த போது 



                                          தீபமேற்றி வழிபாடு செய்ய ஆரம்பித்தோம்.




நம் வீட்டு அகத்தீஸ்வரரும் அன்றைய வழிபாட்டிற்கு வந்தது சிறப்பாக இருந்தது.










                                                                சரணாகதி நோக்கி





பஞ்சாமிர்த அபிஷேகத்தில் நம் குருவும் திருவும் 
















நம்மை ஆளும் அரசரை போற்றினோம்.





இளநீர் அபிஷேகம் செய்த போது 







இதோ தீபாராதனை முடிந்து அலங்காரத்திற்கு நம் அப்பா தயார்.










 கற்பூர ஆரத்தி எடுத்துக் கொள்ளுங்கள். 








இந்த பூசையின் வழியே  நம்மை அகத்தியர் வழி நடத்தி வருகின்றார். ஐயாவோடு சேர்ந்து பல மகான்களும் நம்மை உயிர்ப்பித்து வருகின்றார்கள். சும்மா..எடுத்தோம். கவிழ்த்தோம் என்று சித்த மார்க்கத்திற்கு வந்து விட முடியாது. புல்லாகி, பூடாகி, புழுவாகி மரமாகி என்று மாணிக்கவாசகர் சொன்னது போல் பல பிறவி எடுத்து புண்ணியம் செய்தால் தான் அகத்தீசா ! அகத்தீசா !! என்று நாம் குருவின் நாமம் சொல்ல முடியும். அதுவும் இன்று மூவர் தரிசனம் கிடைத்துள்ளது. இது நமக்கே ஆச்சர்யம் தான். நாம் ஒன்றும் திட்டமிடுவதில்லை. ஆனால் நம் குழுவினருக்காக திட்டம் நம் குருமார்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.


மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் மாசி மாதம் 6 ஆம் நாள் 18/02/2019 திங்கட்கிழமை  அன்று ஆயில்ய நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில்மாலை  6 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய மகரிஷி அவர்களுக்கு  அபிஷேகம், அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352/9677267266

No comments:

Post a Comment

Trending