அடியார் பெருமக்களுக்கு அன்பு வணக்கங்கள்.
மீண்டும் இந்த பதிவில் நாம் அன்பைப் பற்றி பேச உள்ளோம். அன்பா? என்று திகைக்க வேண்டாம். அது அகத்தியம் தான். அன்பு என்றாலே அது அகத்தியர் தான். கருணை விழியால் பத மலர் தருபவர். காரணம் இன்றி காரியமில்லை என்பதற்கு இந்தப் பதிவும் சாட்சி. எப்போது இந்தப் பதிவை நாம் தர நமக்கு உத்திரவு கிடைக்கும் என்று காத்திருக்கும் போது, இன்று நமக்கு தர சொல்லி உணர்த்தி விட்டார்.
சென்ற ஆண்டு ஓதிமலை தரிசனத்திற்கு நாம் சென்ற போது அனுவாவி முருகன் கோயில் பற்றி தேடினோம். ஆனால் கடைசியில் நாம் அனுவாவி ஆஞ்சநேயர் தரிசனம் பெற்று வந்தோம். அதற்கும் பிறகு நமக்கு அனுவாவி செல்ல வாய்ப்பு கிட்டவில்லை. இந்த சூழலில் எம் சகோதரி மூலம் அனுவாவி முருகன் கோயிலும் அங்குள்ள அகத்தியர் ஆசிரமம் பற்றியும் அறிந்தோம்.இருந்தாலும் எப்போ நமக்கு தரிசனம் கிடைக்கும் என்று ஏங்கினோம்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பௌர்ணமி அன்று கோவை செல்ல வாய்ப்பு கிட்டியது. உடனே எம் தங்கை அனுவாவி செல்ல நமக்கு பணித்தாள். அந்த அனுபவத்தை இங்கே தொட்டுக் காட்ட விழைகின்றோம்.
அனுவாவி மலை அடிவாரம் அடைந்தோம். குருவாக முருகப் பெருமான் மலை மீது அருள்பாலித்து .வருகின்றார்.அவரின் சீடரான அகத்தியர் பெருமான் அடிவாரத்தில் ஆசிரமத்தில் அருள் செய்து வருகின்றார்.இது போல் குருவின் கருணையும், சீடனின் பெருமையும் ஒன்றாக இங்கே காணலாம். நமக்கு முருகப் பெருமான் தரிசனம் அன்று கிடைக்கவில்லை.நாம் மிக மிக தாமதமாகத் தான் சென்றோம்.
யாகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிவன் கோயிலில் எப்படி நாம் அறுபத்து மூவரை தரிசனம் செய்கின்றோமோ, அதே போல் இங்கே அனைத்து சித்தர்களின் தரிசனம் பெறலாம்.
இங்கு மாதந்தோறும் பௌர்ணமி பூசையானது யாகம், அகத்தியருக்கு அபிஷேகம், அலங்காரம், அன்ன தானம் என்று சிறப்பாக நடைபெற்று .
சித்தர்களின் ஜோதி தரிசனம் கண்டோம். அருட்பெருஞ்சோதி அல்லவா இது! சற்று நேரத்தில் யாகம் ஆரம்பிக்கப் பட உள்ளது.
இவர் தான் குமார் சுவாமிகள். இமய மலை போன்ற யாத்திரை பலமுறை சென்று வந்துள்ளார். இவர் தான் அகத்தியர் ஆசிரமத்தை பராமரித்து வருகின்றார். ஐயாவை அன்று தான் கண்டோம். பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம்.மலேசியா அகத்தியர் வனம் குழு பற்றியும் சுவாமிகளிடம் சொன்னோம்.
யாகத்தில் இடும் பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.இது மனதிற்கு திருப்தியாக இருந்தது.
அன்பர்கள் அனைவரும் யாகத்தில் பொருட்களை இட தயாராக இருந்தார்கள். அனைவரும் நிறைவு செய்ததும் பூராணாகுதி செய்து ,யஞம் முழுமை பெற்றது. அப்போதே அகத்தியர் தரிசனம் பெற்றோம்.
சித்தர்களுக்கு தீபாராதனை முடிந்தவுடன், அகத்தியர் பெருமானுக்கு அபிஷேகம் என்றார்கள். நாம் சன்னதி வெளியே நின்று கொண்டிருந்தோம். உடனே சுவாமிகள் நம்மை உள்ளே .முதல் சந்திப்பு..கூட்டத்தில் ஒருவனாக வெளியே நிற்க இருந்த நம்மை அவர் அருகிலேயே அழைத்தார் அகத்தியர். இனி அபிஷேகம் ஆரம்பம்.
பால்,தயிர், இன்ன பிற அபிஷேகங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நமக்கு இதை விட வேறென்ன வேண்டும். இதனை அருகில் நம் அப்பன் அகத்தியர் தரிசனம்.
இதோ ,அரிதிலும் அரிதான கிடைத்தற்கரிய சங்கில் பால் அபிஷேகம், இங்கு விசேஷம் என்னவென்றால் ஒவ்வொன்றையும் சுவாமிகள் விளக்கி கூறுவது தான்.
பால் அபிஷேகத்தில் சங்கு நாதம் கேட்க, நமக்கு புதுவித உணர்வு ஏற்பட்டது
அன்ன அலங்காரத்தில் நம் அகத்தியர் பெருமான்
விபூதி அபிஷேகமும் ஆராதனையும்
இதற்கு அடுத்து தான் நமக்கு இன்னுமொரு அபிஷேக தரிசனம் கிடைத்தது. ஆம் ..அது 108 சங்காபிஷேகம்.இது பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.அன்று தான் நேரில் பார்த்தோம். இதோ நீங்களும் கண்டு அருள் பெறுங்கள்.
இத்தகு சிறப்பு மிக்க ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமத்தில் வருகின்ற 26/12/2018 புதன்கிழமை அன்று ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாட குருவருள் கூட்டியுள்ளது. அழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம்.
மீண்டும் இந்த பதிவில் நாம் அன்பைப் பற்றி பேச உள்ளோம். அன்பா? என்று திகைக்க வேண்டாம். அது அகத்தியம் தான். அன்பு என்றாலே அது அகத்தியர் தான். கருணை விழியால் பத மலர் தருபவர். காரணம் இன்றி காரியமில்லை என்பதற்கு இந்தப் பதிவும் சாட்சி. எப்போது இந்தப் பதிவை நாம் தர நமக்கு உத்திரவு கிடைக்கும் என்று காத்திருக்கும் போது, இன்று நமக்கு தர சொல்லி உணர்த்தி விட்டார்.
சென்ற ஆண்டு ஓதிமலை தரிசனத்திற்கு நாம் சென்ற போது அனுவாவி முருகன் கோயில் பற்றி தேடினோம். ஆனால் கடைசியில் நாம் அனுவாவி ஆஞ்சநேயர் தரிசனம் பெற்று வந்தோம். அதற்கும் பிறகு நமக்கு அனுவாவி செல்ல வாய்ப்பு கிட்டவில்லை. இந்த சூழலில் எம் சகோதரி மூலம் அனுவாவி முருகன் கோயிலும் அங்குள்ள அகத்தியர் ஆசிரமம் பற்றியும் அறிந்தோம்.இருந்தாலும் எப்போ நமக்கு தரிசனம் கிடைக்கும் என்று ஏங்கினோம்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பௌர்ணமி அன்று கோவை செல்ல வாய்ப்பு கிட்டியது. உடனே எம் தங்கை அனுவாவி செல்ல நமக்கு பணித்தாள். அந்த அனுபவத்தை இங்கே தொட்டுக் காட்ட விழைகின்றோம்.
அனுவாவி மலை அடிவாரம் அடைந்தோம். குருவாக முருகப் பெருமான் மலை மீது அருள்பாலித்து .வருகின்றார்.அவரின் சீடரான அகத்தியர் பெருமான் அடிவாரத்தில் ஆசிரமத்தில் அருள் செய்து வருகின்றார்.இது போல் குருவின் கருணையும், சீடனின் பெருமையும் ஒன்றாக இங்கே காணலாம். நமக்கு முருகப் பெருமான் தரிசனம் அன்று கிடைக்கவில்லை.நாம் மிக மிக தாமதமாகத் தான் சென்றோம்.
ஆசிரமத்தில் உள்ளே நுழைந்தோம்.
இங்கு மாதந்தோறும் பௌர்ணமி பூசையானது யாகம், அகத்தியருக்கு அபிஷேகம், அலங்காரம், அன்ன தானம் என்று சிறப்பாக நடைபெற்று .
சித்தர்களின் ஜோதி தரிசனம் கண்டோம். அருட்பெருஞ்சோதி அல்லவா இது! சற்று நேரத்தில் யாகம் ஆரம்பிக்கப் பட உள்ளது.
இவர் தான் குமார் சுவாமிகள். இமய மலை போன்ற யாத்திரை பலமுறை சென்று வந்துள்ளார். இவர் தான் அகத்தியர் ஆசிரமத்தை பராமரித்து வருகின்றார். ஐயாவை அன்று தான் கண்டோம். பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம்.மலேசியா அகத்தியர் வனம் குழு பற்றியும் சுவாமிகளிடம் சொன்னோம்.
இதோ யஞம் ஆரம்பித்து விட்டது.
யாகத்தில் இடும் பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.இது மனதிற்கு திருப்தியாக இருந்தது.
அன்பர்கள் அனைவரும் யாகத்தில் பொருட்களை இட தயாராக இருந்தார்கள். அனைவரும் நிறைவு செய்ததும் பூராணாகுதி செய்து ,யஞம் முழுமை பெற்றது. அப்போதே அகத்தியர் தரிசனம் பெற்றோம்.
நவகோடி சித்தர்களுக்கும் இங்கே தீபாராதனை செய்யப்பட்டது.
பால்,தயிர், இன்ன பிற அபிஷேகங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நமக்கு இதை விட வேறென்ன வேண்டும். இதனை அருகில் நம் அப்பன் அகத்தியர் தரிசனம்.
இதோ ,அரிதிலும் அரிதான கிடைத்தற்கரிய சங்கில் பால் அபிஷேகம், இங்கு விசேஷம் என்னவென்றால் ஒவ்வொன்றையும் சுவாமிகள் விளக்கி கூறுவது தான்.
பால் அபிஷேகத்தில் சங்கு நாதம் கேட்க, நமக்கு புதுவித உணர்வு ஏற்பட்டது
சந்தன அபிஷேகம் மேலே
அன்ன அலங்காரத்தில் நம் அகத்தியர் பெருமான்
விபூதி அபிஷேகமும் ஆராதனையும்
இதற்கு அடுத்து தான் நமக்கு இன்னுமொரு அபிஷேக தரிசனம் கிடைத்தது. ஆம் ..அது 108 சங்காபிஷேகம்.இது பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.அன்று தான் நேரில் பார்த்தோம். இதோ நீங்களும் கண்டு அருள் பெறுங்கள்.
அடுத்து அலங்காரமும் ஆராதனையும் தான் உள்ளது.
அனைவரும் அலங்காரத்திற்காக காத்திருந்தோம். அட..
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை
அகத்துள் வைப்போம்
என்று நம்மை துதிக்கும் படி அலங்காரம் இருந்தது. நீங்களும் கண்டு தரிசியுங்கள்.
இரண்டு ,மூன்று முறை சென்று தரிசனம் செய்தோம். மெய் சிலிர்த்தோம். பின்னர் அன்னதானத்தில் உணவு எடுத்துக் கொண்டு. சுவாமிகளிடம் நன்றி சொல்லி .விட்டு அங்கிருந்து விடை பெற்றோம்.
இன்னும் அனுவாவி அகத்தியர் நம்மை ஆட்கொண்டு வருவதை நம்மால் உணர முடிகின்றது.
என்ன அன்பர்களே..ஒரே பதிவில் யாகம்,அபிஷேகம்,அலங்காரம் என அகத்தியர் ஆராதனை பெற்றீர்களா? அனைத்தும் குருவருளால் தான்.
No comments:
Post a Comment