agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Tuesday, January 29, 2019

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலய அகத்தியரின் மகா ஆயில்ய கொண்டாட்டம்

அனைவருக்கும் வணக்கம்.

நமது குருவின் மகா ஆயில்ய கொண்டாட்டத்தில் அனைவரும் அருள் பெற இருக்கின்றீர்கள். இந்த பதிவின் மூலம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலய அகத்தியரின் மகா ஆயில்ய கொண்டாட்டதிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இந்த நிலையில் சித்தன் அருள் வலைப்பதிவில் ஒரு கேள்வியும் அதற்கான பதிலையும் தந்து இந்தப் பதிவை தொடர விரும்புகின்றோம்.

அகத்தியருக்கு ஆயில்யம் நட்சத்திரம் என்பது இல்லை எனபதே கேள்வியின் நோக்கம். சிவன் செய்த யாகத்தால் அகத்தியர் தோன்றினார்  என்பதே சொல்லப்பட்டது. இந்தக்கேள்விக்கு நம் குழுவின் சிலர் இவ்வாறு  பதில் கூறி இருந்தனர்.






நட்சத்திரங்களுக்கு அப்பாட்பட்டவர் அகத்தியப் பெருமான். இந்த மானுடங்களை கடைத்தேற்ற அவரால் வகுக்கப்பட்டது ஆயில்ய பூசை. இந்த பூசையால் பயன்பெற்றோர் ஏராளம்.இது மிக மிக உண்மை..சித்தர்களுக்கு நாளென்பது கிடையாது. நட்சத்திரம் என்பதும் கிடையாது. இவை எல்லம்மா நம் வழிபாட்டிற்காக/ மன மகிழ்ச்சிக்காகவே உள்ளது.அன்றைய தினம் குருவினை சரணடைய ஒரு வாய்ப்பு என்றும் கூட சொல்லலாம். இன்னும் ஆழமாக மனதை உழுதால்,சித்தன் அருள் இவ்வாறு பேசுகின்றது.




உங்கள் எண்ணப்படி, அகத்தியருக்கும், நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள். சிவன் அருளினால் அவர் தோன்றினாலும், காலத்துக்குள், ஒரு திதி நடக்கும் பொழுது, ஒரு நட்சத்திரம் ஆளுமையில் உள்ள பொழுது தான் ஒரு ஆத்மா உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது இறைவனிடமிருந்து பிரித்து விடப்பட்டிருக்கும். ஒரு புல்லை கூட முளைக்க வைக்கும் தகுதி இல்லாத மனிதனுக்கு, நாள், தேதி, கிழமை, ஊர், காலம் என வரிசையாக அனைத்தும் இருக்கும் பொழுது, மிக உயர்ந்த நிலையில், குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருக்கு, நட்சத்திரம் கூடவா இருக்காது? இன்னொரு விஷயம் தெரியுமா? பூமியில், இறைவனே அவதாரம் எடுத்தாலும், பூமியின் சட்ட திட்டங்களுக்கு, அவனும் அடிமையாக இருந்துதான் ஆகவேண்டும். உதாரணமாக, கிருஷ்ணர், ராமர் அவதாரங்களை கூறலாம்.



உண்மையாக புரிந்து கொள்பவர்கள், அமைதியாக இருப்பார்கள். வார்த்தைகள் சிதறாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நாளில், சேய்கள் நல்லதை செய்திட, அது உலகத்தின் நன்மைக்கு பலம் கூட்டும். அப்படியாக ஒன்று நடந்து விட்டு போகட்டுமே என்கிற எண்ணத்தில் தான் இதனை பூஜைகள், த்யானம் எல்லாம் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

சரி ..நாம் விசயத்திற்கு வருவோம்.

இந்த மாதம் 26ம் தேதி (மார்கழி மாதம்) அகத்தியப் பெருமானின் ஆயில்ய திரு நட்சத்திரம் வருகிறது. அகத்தியப் பெருமானின் கோவில்களிலும், வேறு பல புண்ணியத் தலங்களிலும் அவருக்கான அபிஷேக பூஜைகள் மிகச் சிறப்பாக நடக்கவுள்ளது. வலைப்பூவில் தேடிப்பார்த்தால், எங்கெல்லாம் பூசை நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.



அகத்தியர் அடியவர்கள் அனைவரும், அருகில் எங்கேனும் அகத்தியருக்கு பூஜை நடந்தால், சென்று பங்கு பெற்று, உங்களால் முடிந்த உதவிகளை, உழவாரப் பணிகளை செய்யுமாறு, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். காலம் சற்று சுகவீனம் அடைந்துள்ளதால், தர்மமும், புண்ணிய கர்மாவும் குறைந்துவிட்டதாக தகவல். அகத்தியரின் அடியவர்களாகிய நாம் அதை மெருகுபடுத்த, அவரின் உத்தரவின் பேரில், அன்றைய தினம், குறைந்தது நல்ல வேண்டுதல்களை வைக்க வேண்டும், லோகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்போம்.




ஏற்கனவே நம் தலத்தில் தமிழகம் முழுதும் நடைபெற உள்ள பூசைகள் குறிப்புகளை தொகுத்து தந்து உள்ளோம். படித்து பார்த்து தங்களின் நலம் விரும்பிகளிடம் இந்த செய்திகளை கொண்டு சேர்க்கவும். இவ்வாறு ஏதேனும் ஒரு மனிதர் சித்த மார்க்கத்திற்கு வந்தாலே ..அது நாம் செய்யும் புண்ணியம் ஆகும்.

சரி..நாம் இது நாள் வரை அகத்தியரை எப்படி எல்லாம் வழிபட்டு வருகின்றோம். பக்தி மார்க்கம் , தான தர்ம மார்க்கம், கர்மயோக மார்க்கம், ஞானயோக மார்க்கம்  என்று வழிபடலாம். ஆனால் நாம் செய்து வரும் ஆயில்ய பூசையின் என்ன செய்து வருகின்றோம்.  அகத்தியரை உருவமாக பாவித்து மலர்கள் மூலிகைகள் படைத்து அர்ச்சனை செய்து வழிபடுவதுநமக்கு  மிகவும் பிடித்தமானது. இது அகத்தியரை விரும்பும் யாவருக்கும் எளிதில் சாத்தியமானது. பாசமுள்ள அகத்தியமாஹாமுனி இந்த மார்க்ககத்தில் யாவரும் வழிபடுவதை அவர் மிகவும் விரும்புவதை நாம்  உணரலாம்.  நாம் கடந்த பள்ளிப்பருவத்தில் இருக்கும் போது பக்தி மார்க்கத்தை அடிக்கடி ஏளனம் செய்ததுண்டு. அதற்கு  நாம்  கடும் தண்டனை வாங்கியதுண்டு. இந்த கலியுகத்தில் பக்திமார்க்கம் மிகவும் எளிதானது. ஆற்றல் வாய்ந்தது. முதலில் ஆரம்பித்த போது பக்தி மார்க்கத்தில் மட்டும் தான் இருந்தோம்.பின்னர் அப்படியே அது தான/தர்ம மார்க்கம், கர்மயோக  மார்க்கம் நோக்கி நம்மை செம்மைப்படுத்தும்.

இதோ..இந்த முறை



என் உடல் என்னும் பம்பரத்தில்

உயிர் என்னும் கயிற்றைக் கட்டி

வினை என்னும் ஆட்டக்காரன்

ஆட்டுவிக்கிறான்

இறைவா எம்பிரானே அகத்தீசா

வினை அறுக்க உன்னையே சரணடைந்தேன்


போற்றினால் உனது வினை அகலுமப்பா

போற்றினால் பூரணமும் குடப்பேசும்

என்று சொன்னவனும் நீ தானே

ஆகவே உன்னையே சரணடைந்தேன்


நான் விடுகின்ற மூச்சும் நீயே

என் உடலும் நீயே உயிரும் நீயே

கூட்டுவிப்பவனும் நீயே குலைவிப்பவனும் நீயே

ஆட்டுவிப்பவனும் நீயே பெருமானே


இனி பிறப்பு வேண்டாம் எங்களுக்கு

ஒரு வேளை பிறப்பு இருக்குமானால்

அப்பிறப்பில் உனக்கு தொண்டு செய்யும்

பாக்கியத்தைக் கொடுத்தருள்வாயாக அகத்தீசா!

என்று போற்றி இரண்டு நாட்கள் ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம்.


மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் மார்கழி  மாதம் 10 ஆம் நாள் 25/12/2018 புதன் கிழமை   அன்று ஆயில்ய நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் மாலை  8 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய மகரிஷி அவர்களுக்கு 108 தீப விளக்கேற்றி  அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.



நிகழ்ச்சி நிரல்:-

25/12/2018 - மாலை 6 மணி  -108 தீப விளக்கு ஏற்றல் 
25/12/2018 - மாலை 7 மணி - சித்தர்கள் போற்றி தொகுப்பு ஓதுதல் 
25/12/2018 - இரவு 8 மணி - தீபாராதனை & பிரசாதம் விநியோகம் 

26/12/2018 - காலை 9 மணி - அபிஷேகம்
26/12/2018 - காலை 9:30 மணி அர்ச்சனை
26/12/2018 - காலை 10 மணி  - தீபாராதனை பிரசாதம் விநியோகம் 


தொடர்புக்கு : 7904612352/9677267266






நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்


No comments:

Post a Comment

Trending