agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Sunday, February 11, 2018

அகத்திய அடியார்களுக்கு இனிய செய்தி - அகத்தியர் வனம் இந்தியா (AVI)

இறை அன்பர்களே.

வணக்கம். இதோ தேடல் உள்ள தேனீக்களாய் குழு இந்த மாதம் தன் மூன்றாம் ஆண்டு பயணத்தை துவக்கியுள்ளது. இந்த சிறு பயணத்தை ஒரு சிறிய விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் மூன்றாம் ஆண்டு பயணம் குருவருளாலும், இறையருளாலும் சிறப்பான தொடக்கம் பெற்றுள்ளது. முதன் முதலாக நாம் ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்தோம். அதற்கான ஆயத்தப் பணிகள் செய்து சபரி மலை ஜோதி தரிசனம் சென்றோம். அப்போது அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் "அகத்தியர் கீதம்" என்ற அருள் தொகுப்பை வெளியிட்டார்கள்.



இதனை நம் ஆண்டு விழாவில் சேர்க்கும் படி நமக்கு உள்ளுணர்வாய் உதித்தது. உடனே அவர்களிடம் தொடர்பு கொண்டு, நிகழ்வின் நிரலை மாற்றி, மீண்டும் ஆயத்தப்  பணிகள் ஆரம்பமானது. விழாவிற்கு மற்றும் நமது அடியார்களுக்கும் தேவையான அளவில் ஒலித்தகடு நமக்கு சென்ற வாரம் வந்து சேர்ந்தது. அதனுடன் அகத்தியரும் நம் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.



இந்த பயணத்தில், சுமார் ஓராண்டுக்கு முன்னர், அகத்தியர் வனம் மலேஷியா போன்று, இந்தியாவில் உள்ள அனைத்து அகத்தியர் அடியார்களை ஒன்றிணைத்து செல்ல வேண்டி முற்பட்டோம். ஆனால் அந்த முயற்சி அப்படியே நின்று விட்டது, நாமும் அப்போது தான் அகத்தியத்தில் நுழைந்த நேரம். பின்னர் படிப்படியாக பஞ்செட்டி சதய பூசையில் கலந்து கொள்ள ஆரம்பித்தோம். மெல்ல மெல்ல சித்தர் பூசையின் மகத்துவம் உணர்ந்தோம். இதோ..கூடுவாஞ்சேரி வந்து சுமார் 2 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இங்கு மாமரத்து விநாயகர் கோயிலில் அகத்தியர் வீற்றிருப்பது தெரிய வந்தது.அகத்தியரின் அருள் வாக்கிற்கு இணங்க, மாதந்தோறும், ஆயில்ய நட்சத்திரத்தில் ஆராதனை செய்து, கூடுவாஞ்சேரி அகத்தியரிடம் பிராத்தனை செய்து வருகின்றோம். ஒவ்வொரு மாதமும் அகத்தியர் கொடுக்கும் ஆசி அளப்பரியது. சொல்லில் அடக்க இயலாதது. அகத்திய அன்பர்களின் தொடர்பும் நம்மில் சேர்ந்த வண்ணம் உள்ளது.



இந்த சூழ்நிலையில், மீண்டும் அதே எண்ணம் உதித்தது. இந்தியாவில் உள்ள அனைத்து அகத்திய அடியார்களையும் ஒன்றிணைக்க வேண்டும், மாதந்தோறும் நடைபெறும் அகத்திய பூசைகளைப் பற்றிய செய்திகளை ஒருங்கே பரிமாறவும், அகத்தியர் பற்றிய செய்திகள், அகத்தியரின் பாடல்கள் போன்ற பல செய்திகளை வெளியிடவும் வேண்டி, அகத்தியர் வனம் இந்தியா (AVI ) என்ற வலைத்தளத்தை இந்த நன்னாளில் துவக்க இருக்கின்றோம். அனைத்து அகத்திய அன்பர்களும் இந்த வலைத்தளத்தை உபயோகித்து, சத்திய நெறியான அகத்தியம் உணர முற்படுவோம். இந்த வலைதளத்தின் நீட்சியாக வாட்ஸாப் குழு ஒன்றும் துவக்க உள்ளோம். அன்பர்கள் இணைந்து அகத்தியர் ஆசி பெற நம்மால் முடிந்த சேவைகளைத் தொடர்வோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

No comments:

Post a Comment

Trending