agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Wednesday, February 14, 2018

பஞ்செட்டி கும்ப மாத சதய பூசை அறிவிப்பு (16/02/2018)

ஸ்ரீ ஆனந்தவல்லி  சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், பஞ்சேஷ்டி - ஸ்தல வரலாறு

இறைவன் - அருள்மிகு அகத்தீஸ்வரர்

இறைவி - அருள்மிகு ஆனந்தவல்லி

தீர்த்தம் - அகத்திய தீர்த்தம்

ஸ்தலம் - பஞ்சேஷ்டி ( பஞ்ச - ஐந்து இஷ்டி -யாகம் )

ஸ்தல விருட்சம்  - வில்வம்

இதர மூர்த்திகள் - சித்தி விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் , இஷ்ட லிங்கேஸ்வரர்,பைரவர், அகத்தியர்



கோவிலின் அமைப்பு: கோவிலின் ராஜகோபுரம், பழைய சிற்பவேலைப்பாடுகளுடன்  தெற்கு திசைப்  பார்த்துள்ளது. அதாவது ஒரே கோபுரம் உள்ளதால் அது ராஜகோபுரம் என்று கருதப்படுகிறது. மூலவர் லிங்கம் கிழக்கு பார்த்துள்ளது,  கோவிலின் கிழக்குப் பகுதியில் “அகத்திய தீர்த்தம்” எனப்படுகின்ற பெரியதான குளம் உள்ளது. அகத்தீஸ்வரர் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. கோவிலின் மேற்குப் பக்கத்தில் வயல்வெளியும், வடக்குப் பக்கத்தில் வீடுகளும் உள்ளன. வடகிழக்கு  மூலையில், இக்கோவிலை ஒட்டியுள்ளபடி, ஒரு பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் நிலம் பெரிதாக இருந்தாலும், கோவில் சிறிதாக கோபுரம் இன்றி, ஏதோ ஒரு அறைப் போன்றுள்ளது உள்ளே விக்கிரங்களோ, சிற்பங்களோ இல்லை. வெறும் படங்கள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன..

கோவிலில் விஞ்ஞானம் முதலிய பாடங்களை கற்றுக் கொள்ள முடியுமா? “படம் பார்த்து கதை சொல்” என்ற முறை சிறார்களுக்கு போதிக்க உபயோகப்படும் கல்வி-முறை. அதேப்போல, உருவங்களைப் பார்த்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் சிற்பங்களை அமைப்பது, குறிப்பாக, மக்கள் அதிகமாக வரும் இடம் – கோவிலில் வைப்பது, அதன் மூலம் விளக்குவது, இவ்விதமாக, விஞ்ஞானம், தொழிற்நுட்பம் மற்ற எல்லா பாடங்களும் எல்லோருக்கும் சென்றடையும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளவைதான் கோவில்கள், கொவில் கோபுரங்கள், அவற்றில் உள்ள சிற்பங்கள். கண்ணால் பார்க்க முடியாத மின்சாரம், அணு, மின்னணு, மின்னணுக் கூறுகள், கூற்றுத்துகள்கள் என்பவற்றைப் பற்றியெல்லாம் படமாகப் போட்டுத்தான் கற்பிக்கிறார்கள். அவற்றைப் பார்க்கவோ, தொட்டுப்பார்த்து உணரவோ முடியாது. பூமிக்கு மேலே அட்ச-தீர்க்க-பூமத்திய ரேகைகள் இருப்பதாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் விமானத்தில் பூமிக்கு மேலே பறந்து சென்றாலும், அவற்றைப் பார்க்க முடியாது. ஆனால், காகிதத்தில் மேலே வரைந்து காண்பித்து விளக்குகிறார்கள், மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.



வானவியல், கணிதம் முதலியவற்றைப் பற்றி சுலபமாகத் தெரிந்து கொள்ள உதவும் ராஜகோபுரம்: மற்ற கோபுரங்களைப் போல இல்லாது, இதில் குறிப்பாக அஷ்டதிக் பாலகர்களின் சிற்பங்கள் – இந்திரன் (கிழக்கு), அக்னி (தென்கிழக்கு), எமன் (தெற்கு), நிருதி (தென்மேற்கு), வருணன் (மேற்கு), வாயு (மேற்கு), குபேரன் (வடக்கு), ஈசான் (வடமேற்கு) அமைந்துள்ளன. இக்கோவில் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. வாயிலின் இரு பக்கங்களிலும் உள்ள பெண்  சிற்பங்கள் சாதாரணமாக மற்ற கோவில்களில் உள்ளது போலவே உள்ளன. அதனால் விஜயநகர காலத்தில் கட்டப்பட்டது என்று நிர்ணைக்கப்படுகிறது.


எண்
திசை
திசைக்குண்டான தேவதை
வாகனம்
குணாதிசயங்கள்
1கிழக்குஇந்திரன்யானைபலம், திறன்
2தென்கிழக்குஅக்னிசெம்மறி ஆடுபயமின்மை, வீரம், அடங்காமை
3தெற்குயமன்எருமைசலனமின்மை, இயக்கமின்மை, மந்தம்
4தென்மேற்குநிருதிமனித-விலங்குரகசியம், நிலையில்லாமை
5மேற்குவருணன்முதலைசுத்தம், ஆரோக்யம், இயற்கை
6வடமேற்குவாயுமான்வேகம், அழகு, வேகம்
7வடக்குகுபேரன்ஆடுவளம், செழுமை, செல்வம்
8வடகிழக்குஈசானம்எருதுபலம், தான்யம்
இவையெல்லாம் எளிதாக சிற்பங்களில் பார்த்து தெரிந்து கொள்ளாலாம். இந்த அஸ்டதிக் பாலகர்களின் சிற்பங்கள், அம்மனை பார்த்து, எதிர்புறத்தில் ராஜகோபுரத்தில் உள்ளன, மற்றும் கோபுர கூரையின் அடிப்பக்கத்தில் செதுக்கப்பட்டுள்ள சக்கரத்திலும் காணலாம்.
இதைத்தவிர, கோபுரத்தின் அடிப்பகுதியில், அதாவது, உள்பக்க கூரையில், ராசி மண்டலம், நட்சத்திர மண்டலம், யுகாதி கணக்கீடு முதலியவற்றை விளக்கும் வண்ணம் ஒரு சக்கிரம் அமைந்துள்ளதும், அதற்குண்டான விளக்கத்திற்கு பதிலாக சிற்பங்களையே தத்ரூபமாக அமைத்திருப்பது, வானவியலை பாமர மக்களும் எளிதில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முறையில் அமைந்துளது.
  • நடுவில் பிந்து / புள்ளி அல்லது உருண்டை, அதைச்சுற்றி முக்கோணம், சதுர வடிவங்கள்
  • இதைச் சுற்றி இரண்டு ஐங்கோணங்கள் பிண்ணிப் பிணைந்துள்ளது போல செதுக்கப்பட்டுள்ள வடிவம்
  • இதைசுற்றியுள்ள ராசி மண்டலத்தின் சக்கரம் – இதில் 12 ராசித்தேவைதைகளின் உருவங்கள் வாகனங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன.
  • இதைச் சுற்றியுள்ள சக்கரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் இடையில் மற்ற எட்டு தேவதைகளின் சிற்பங்கள் உள்ளன. மொத்தம் 16 தேவதைகள்.
  • 0, 1, 2, 4, 8, 16 முதலியன கணக்கியலின் படி ஒரு தொடர் ஆகும். ஆனால் இங்கு எண்களின் வளர்ச்சி, பரிணாம வளர்ச்சியை, படைப்பை, படைப்பின் வளர்ச்சியை, உகங்களில் எவ்வாறு இருந்தன என்பதைக் காட்ட அவ்வாறு செதுக்கப்பட்டுள்ளன.
  • 27 நட்சத்திரங்கள் கீழ்வருமாறு (இதில் அபிஜித் சேர்க்கப்பட்டுள்ளதால் 28 என்றுள்ளன):
எண்நட்சத்திரம்தேவதைஅதிதேவதை
1அஸ்வினிஅஸ்வினி தேவதைகள்சரஸ்வதி
2பரணியமன்துர்க்கை
3கார்த்திகைஅக்னிஅக்னி
4ரோஹிணிபிரும்மாபிரும்மா
5மிருகசிரிஷம்சோமன்சந்திரன்
6திருவாதிரைருத்ரன்ருத்ரன்
7புனர்பூசம்அதிதிஅதிதி
8பூசம்பிருஹஸ்பதிகுரு
9ஆயில்யம்ஸர்ப/நாகராஜன்ஆதிஷேசன்
10மகம்பித்ருக்கள்சுக்ரன்
11பூரம்சூரியன்பார்வதி
12உத்தரம்பகன்சூரியன்
13ஹஸ்தம்சுவிதாசாஸ்தா
14சித்திரைதுவஷ்டாதுவஷ்டா
15சுவாதிவாயுவாயு
16விசாகம்இந்திராக்னிசுப்ரமண்யர்
17அனுஷம்மித்ரன்லக்ஷ்மி
18கேட்டைஇந்திரன்இந்திரன்
19மூலம்பிரம்மாஅசுரர்
20பூராடம்ஜலதேவன்வருணன்
21உத்திராடம்விஸ்வதேவர்கள்விநாயகர்
22அபிஜித்பிரும்மாபிரும்மா
23திருவோணம்விஷ்ணுவிஷ்ணு
24அவிட்டம்வஸுக்கள்வஸுக்கள்
25சதயம்வருணன்யமன்
26பூரட்டாதிஅஜைகபாதர்குபேரன்
27உத்திரட்டாதிஅஹிர்புத்னயர்காமதேனு
28ரேவதிசூரியன்சனி
  • 12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் அடக்கமாகின்றன. அவை 6 பருவ காலங்களில் அடங்குகின்றன.
  • இவையெல்லாம் சுழற்சி முறையில் இயங்கி வருவதால், 0 முதல் 360 டிகிரிகளில் அடங்குகின்றன.
  • வட்டத்தை சதுரமாக்குதல், சதுரத்தை வட்டமாக்குதல் என்பது இந்தியர்களுக்குக் கைவந்த கலை. அதனால்தான், இந்த ராசி-நட்சத்திர மண்டலங்களை வட்டமாகவும், சதுரமாகவும் அமைக்கின்றனர். அண்டகோலத்தில் பார்த்தால் உருண்டை வடிவம். அதனை பூமி மீது உருவகமாக வைத்துப் படித்தால் சதுரம்.

சீவநாடி குறிப்பு சில வருடம் முன்பு சொன்னது : "அகத்தியர் உட்பட பதினெண் சித்தர்களும் யக்னம் செய்த இடம் பஞ்சட்டி. அகத்தியர் ஐந்து முறை பெரிய யக்னம் செய்ததால் பஞ்சடி என்ற பெயர் பெற்றது."




இந்த ஸ்தலம் சென்னையிலிருந்து சுமார் 30 km தூரத்தில் உள்ளது. சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது எந்த இடம். காரனோடை செக் போஸ்ட்  தாண்டி தொடர்ந்து வந்தால் இப்போது கட்டுமானத்தில் உள்ள ஒரு மேம்பாலம் வரும். அங்கே ஒரு U turn எடுத்து விட்டால் தேசிய சாலையின் இந்த பக்கம் (சென்னை செல்லும்) வந்து விடுவீர்கள் . அங்கிருந்து சுமார் 300 டு 400  மீட்டர் தூரத்தில் பஞ்செட்டி arch ஒன்றை காணலாம். அதற்குள் திரும்புங்கள். ஒரு 50 மீட்டர் சென்று இடம் திரும்பினால் கோவிலை காணாலாம்.

இங்கே அகத்தியரை மனதார சதயம் அன்று வேண்டுபவர்கள் எல்லா நலன்களையும் பெறுவார்கள் என்று சித்தர் நாடி குறிப்புக்கள் கூறுகின்றன. எல்லா சதயம் நாட்களில் அகத்தியர் பூசை வேண்டுதலும் நடக்கின்றது.

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வென்ஜாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.

 கும்ப மாதம் என்னும் மாசி மாதத்தில் சதய பூசை நாளை நடைபெற உள்ளது. இது மிக மிக முக்கியமான பூசை ஆகும். முன்னோர்களின் ஆசி, பித்ருக்களின் ஆசி தந்து கர்ம வினைகளை நாளை நடைபெறும் சதய பூசை தர வல்லது. 16/02/2018 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறும் இப்பூசையில் கலந்து கொண்டு அகத்தியர் ஆசி, நவகோடி சித்தர்களின் ஆசியும் பெறும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
  
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

No comments:

Post a Comment

Trending