agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Tuesday, January 29, 2019

நாம் சென்ற ஆண்டு கொண்டாடிய ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி ...




மெய்யுணர்வாளர்களே...

அனைவருக்கும் வணக்கம். மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்கள் அனைவரையும் இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். உழவாரப் பணி அனுபவம் பற்றி இதற்கு முந்தைய பதிவில் பேசி இருந்தோம். இன்றைய பதிவில் நாம் சென்ற ஆண்டு கொண்டாடிய ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி  பற்றி காண இருக்கின்றோம்.

காரணமின்றி காரியமில்லை என்பது இந்தப் பதிவிற்கு சாலப் பொருந்தும். ஓராண்டுக்கும் மேலாக இந்தப் பதிவினை நாம் இங்கே அளிக்க இருக்கின்றோம். ஏன்..? நாம் இன்னும் அகத்தியத்தை உணரவில்லை. இன்னும் மனதளவில் அழுக்கு கொண்டுள்ளோம். இப்போது தான் அவற்றை கழுவி வருகின்றோம். துணிகளில் உள்ள அழுக்கை போக்க சோப்பு கொண்டு துவைத்தால் சரி ஆகிவிடும்.மனதில் உள்ள அழுக்கை எப்படி போக்குவது? மன அழுக்கை நீக்க எந்த கடையில் சென்று எந்த சோப்பு வாங்குவது? இதற்கு தான் நமக்கு சித்தர்கள்,குருமார்கள்,மகான்கள் கிடைத்துள்ளார்கள். இவர்களின் கருத்துக்களை படித்தால் மட்டும் பத்தாது, கருத்துக்களை பிடிக்க வேண்டும். எப்படியோ, அகத்தியரின் ஆசியால் தொடர்வோம்.



அன்றைய தினம் மாலை நம் மகளிர் அன்பர்கள் சுமார் 4 மணிக்கெல்லாம் கோயிலை அடைந்து விட்டார்கள். வந்ததும் 108 தீபம் ஏற்ற ஆயத்தப் பணியில் ஈடுபட்டனர்.




108 அகல் விளக்கை கழுவி துடைத்து, மஞ்சள் குங்குமம் வைத்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர்.




மறுபுறம் ஆயில்ய ஆராதனைக்கு தயார் செய்து கொண்டிருந்தோம். சென்ற ஆண்டு புரட்டாசி மாதம் முதன் முதலாக ஆயில்ய பூசை செய்து இதோ..மார்கழி ஆயில்யத்தை குரு பூசை என்று கொண்டாட பணித்த போது, 108 தீபம் உலக மக்கள் நன்மைக்காக முடிவு செய்தோம்.





மேலே நீங்கள் பார்ப்பது ஒரு அகலில் 108 திரி அடங்கிய ஒற்றை திரி ஆகும். இது நம் சென்னையில் உள்ள பாரிமுனையில் தான் கிடைக்கும், மிக மிக சிரமேற்கொண்டு திரு.சந்திரசேகரன் அண்ணன் அவர்கள் கூடுவாஞ்சேரிக்கு கொண்டு வந்து சேர்த்தார். அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


தீபமேற்ற நெய் ஊற்றும் சேவையில் சந்திரசேகரன் அண்ணனும், பரிமளம் அவர்களும்.


அன்றைய தினம் மேலும் ஒரு ஆச்சரிய நிகழ்வு நடந்தது. இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. குரு பூசை என்பதால் தான் அகத்தியர் தாமாக வந்து சேர்ந்தார். மிகப் பெரிய அளவில் அகத்தியரின் அருள் நிலைப் படம் வந்து சேர்ந்தது. அவர்களைப் பற்றி நம்மிடம் சொன்னார்கள். அவர்களை எங்கோ பார்த்திருக்கின்றோம் என்று நினைவு. நன்கு பழகிய அன்பர்கள் போல் தான் உணர்ந்தோம். ஆனால் சரியாக நினைவிற்கு வரவில்லை. மனதின் ஓரத்தில் இவர்கள் யார்,யார் என்ற ஓட்டம். இதோ பூசை ஆரம்பம்.


இதோ அபிஷேகம் ஆராதனை ஆரம்பம்.



கோயிலின் நுழைவாயிலில் "ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ" என்று எழுதி வண்ணக்கோலம் இடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கு காரணம் கோயில் குருக்கள் திரு.குமார் அவர்கள் தான். நாம் இந்த பூசையை கொண்டாட வேண்டும் என்று மட்டும் தான் சொன்னோம். ஆனால் அவர்கள் இது போன்ற கோலம்,108 தீபம் என நம்மை திக்கு முக்காட வைத்துவிட்டார்கள். அனைத்தும் அந்த அன்பின் ஆழம் என்று நினைத்தோம்.










அபிஷேகத்தின் போது சித்தர்களின் போற்றியை படித்தோம். மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். அகத்தியர் பூசை என்றால் அகத்தியர் அடியார்கள் மட்டும் தான் வரவேண்டும் என்று நினையாதீர். குருமார்க்க அன்பர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்.



இதோ..கோலம் தயார் . அகத்தியரும் தயார். நாம் தான் தயாராக வில்லை. ஆம்..இப்பொழுது தான் நாம் தயாராகி உள்ளோம். ஓராண்டு பயணம் நமக்கு தேவைப்பட்டுள்ளது. அனைத்தும் உடனே நடக்காது, நாம் பொறுமை காக்க வேண்டும். பொறுமை தான் அகத்தியத்தின் ஆழமும் கூட.



இதோ. அலங்கார தரிசனத்தில் நம் ஐயன்.









கண்டு மகிழுங்கள். கீழே உள்ள அகத்தியர் அருள் நிலை கொடுத்தவர்களை நாம் கடைசியில் கண்டுபிடித்து விட்டோம். இதோ.108 தீபம் ஏற்ற தயாரான போது.




கோயில் குருக்கள் முதல் தீபம் ஏற்றிய காட்சி. இந்த தீபம் தான் நம்மை மோட்ச தீபம் ஏற்ற வழிகாட்டியுள்ளது என்று நாம் நினைக்கின்றோம்.








அன்பர்கள் வரிசையாக நின்று ஒவ்வொரு தீபமாக ஏற்றும் கண்கொள்ளாக்காட்சி. மேலே நீங்கள் படத்தில் பார்க்கும் அகத்திய அடியார் திரு.மணிவண்ணன் மற்றும் திருமதி உமா அவர்கள் தான் மிகப்பெரிய அகத்தியர், சித்தர்கள் படத்தை கொண்டு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த இந்த படம் அன்று உடைந்து விட்டது. சரி செய்ய மாலை பெருகளத்தூருக்கு வந்துள்ளார்கள். அப்போது அவர்களுக்கு நாம் இங்கே கொண்டாடும் அகத்தியர் பூசை பற்றி சொல்லி உள்ளார்கள்.உடனே அவர்கள் பூசைக்கு வந்து விட்டார்கள். நமக்கு சுமார் ஓராண்டுக்கு முன்னர் வந்தவாசியில் இருந்து சென்னை வருவதற்கு அவர்களின் காரில் இடம் கொடுத்ததும், அடையார் ஆனந்த பவனில் உணவு வாங்கிக் கொடுத்ததும் நம் நினைவிற்கு வந்தது. அகத்தியரின் திருவிளையாடல் தான் என்னே! ஓராண்டுக்கு முன்னர் ஒரு அறிமுகம். இப்போது நம் TUT குழுவின் பூசையில் கலந்து கொண்டது என ஒவ்வொன்றும் அற்புதம். ஆனந்தம்.








இந்த 108 தீபங்களை பார்க்கும் போது  நம்மை அகத்தியர் வழிநடத்துவது கண்கூடாய் தெரிகின்றது. படியே மோட்ச தீபத்திற்கு வாருங்கள்.இந்த 108 தீபமேற்றிய இடத்தில தான் கருணைக்கடலின் கந்தனின் ஆசியோடு, அகத்தியரின் அன்பில் நாம் மாதந்தோறும் மோட்ச தீபம் ஏற்றி வருகின்றோம். வழிநடத்தும் குருமார்களின் பதம் பணிவோம்.

இந்தாண்டு ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி  இந்த மாதம் 26/12/2018 அன்று கொண்டாட உள்ளோம். என்ன,எப்படி கொண்டாட உள்ளோம். நாம் ஒன்றும் தீர்மானிப்பதில்லை. அனைத்தையும் அவரிடமே சமர்ப்பித்துவிட்டோம். விரைவில் மீண்டும் சந்திப்போம்.



No comments:

Post a Comment

Trending