agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Monday, July 16, 2018

அகத்தியர் லோபாமுத்திரை பூஜிக்கும் மிகவும் பழமையான கோயில்பாளயம் காலகாலேசுவரர் கோயில்

 இந்த ஜூலை மாதம் முழுவதும் தங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்
அனைவருக்கும் சிறப்பான ஏற்றமான நலமான சுகமான தாக அமைய ஸ்ரீ லோபாமுத்திரை ஸ்ரீ அகத்தியர் ஆசிர்வாதம்.

 இன்று அகத்தியர் லோபாமுத்திரை பூஜிக்கும் மிகவும் பழமையான கோயில் பாளயம் காலகாலேசுவரர் கோயில் கோவில்பாளையம் காலகாலேசுவரர் கோவில்

அமைவிடம்
நாடு:
இந்தியா
மாநிலம்:
தமிழ்நாடு
மாவட்டம்:
கோயம்புத்தூர் மாவட்டம்
மூலவர்:
காலகாலேசுவரர்
தாயார்:
கருணாகரவல்லி



உயிர்களை அழிக்கும் தனது சக்தியை இழந்த காலன் (யமன்) இத்தலத்தில் மணலும் நுரையாலுமான லிங்கம் செய்து வழிபட்டுத் தன் அழிக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றார் என்பது தொன் வரலாறு. இதன் காரணமாக இக்கோவிலில் சிவன் காலகாலேசுவரர் எனப்படுகிறார். காலகாலேசுவரை வழிபட ஆயுள் பலமாகும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், தம்பதியினர் அறுபதாம் திருமணம் செய்துகொள்கின்றனர்



திருக்கடையூர் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் சக்தி கொண்ட திருத்தலமாகப் பெருமை பெற்றாற்போல இத்திருத்தலம் திருக்கடையூருக்கு இணையாகக் கூறப்படுகின்றது

விசுவாமித்திரர்
தவம் செய்து விசுவாமித்திர முனிவராக மாறிய கௌசிக மன்னர் இத்திருத்தலத்தில் யாகம் செய்ததால் கௌசிகபுரி எனும் பெயர் பெற்றது. யாகம் செய்த இடம் ’திருநீற்றுமேடு’ என்று வழங்கப்படுகின்றது.

எமதேவர்
திருக்கடையூரில் மார்க்கண்டேயரையும் சிவபெருமானையும் அவமதித்ததற்குப் பரிகாரமாக சிவபெருமான் எமதேவனை கொங்கு நாட்டின் கோவில்பாளையத்தில் வழிபடக்கூற, அவ்வாறே இங்கு வந்து தமது தண்டத்தினால் பூமியை அழுத்தி தீர்த்தம் ஏற்படுத்தி, அதனை பயன்படுத்தி மண்ணைக்குழைத்து சிவலிங்கத் திருமேனி செய்து வழிபட்டு பலன் பெற்றார் எமதேவர். தரிசனமளித்த சிவபெருமானிடம் எமதேவர் திருக்கடையூரில் தரிசிப்போருக்குத் தரும் பலனை இத்தலத்தில் தரிசிப்போருக்கும் தர வேண்டினார்.சிவபெருமானும் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதால் அன்றுமுதல் திருக்கடையூருக்கு இணையான திருத்தலமாக வழிபடப்படுகின்றது.



கரிகால் சோழன்
காரணமின்றி ஓர் இளம் பன்றியைக் கொன்ற பாவம் தீர நாரதர் அறிவுரைப்படி இத்திருத்தலத்தில் வழிபட்டு பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து விமோசனம் பெற்றார் மன்னர் கரிகாற் சோழன்.
கரிகால் சோழர் வில், அம்புடன் கூடிய நஞ்சுண்டேஸ்வர சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார்

இங்கு சிவன் காலகாலேசுவரராக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் அம்மன் கருணாகரவல்லி (பார்வதி). கொடிமரத்திற்கு அடுத்து வரும் நுழைவாயிலுக்குள் சென்றதும் இடப்புறம் சந்திரனுக்கும் வலப்புறம் சூரியனுக்கும் சிறியதாய் தனிச் சன்னிதிகள் உள்ளன. அடுத்து பலிபீடமும் நந்திதேவரும் உள்ளனர்.



சுவாமி சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கருணாகரவல்லி அம்மன் சன்னிதியின் முன்பகுதியில் இடப்புறம் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாளும் வலப்புறம் துர்க்கையும் உள்ளனர். சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதியின் வெளிச்சுற்றுச் சுவரின் பின்புறத்தில் சண்டிகேசுவரருக்கு எதிரில் பிரம்மாவும் உள்ளார். இத்திருக்கோயில் உள்ளே கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
சிவன் கோவிலில் விஷ்ணு, பிரம்மா இருவரும் வழிபடப்படுவது இக்கோவிலின் சிறப்பு.
கோவில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் திருவுருங்களும் தனியிடத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.

மூலவர் காலகாலேசுவரர்
உற்சவர்
அம்மன்/தாயார் கருணாகரவல்லி
தல விருட்சம்
தீர்த்தம் காலபொய்கை தீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை 1000-2000 வருடங்களுக்கு
புராண பெயர் கௌசிகபுரி



மனிதப்பிறவி என்பது இறைவனின் படைப்புகளிலேயே மிக உயர்ந்த படைப்பென்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நாகரீகம், அறிவு, பணம், புகழ் என்ற மாயைகள் நம்மைச்சுற்றி வளரவளர நமது பிறவிக்கான உயர் தத்துவத்தை மறந்து கீழான விலங்கு நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பது நிதர்சனம். உடலில் வலு இருக்கும் போதும், பணம், பதவி இருக்கும்போதும் நமக்குள் உண்டாகும் தலைமைப்பண்பு நம்மை இறை சிந்தனையினை தவிர்த்து நான், தனது என்ற ஆணவப்பண்பை மேலோங்கச்செய்து நம்மை இறைநிலையிலிருந்து விலகச்செய்கிறது. இதன் விளைவாக நமக்குள் இருக்கும் அன்பு, இரக்கம், கருணை என்ற மனிதம் சார்ந்த நல்ல குணங்கள் மறைந்து சுயநலம் மிகுந்து சிலநேரங்களில் நமது வாழ்கைப் பாதை தடுமாறுவதை காண்கிறோம். ஆனால், இதற்கு நேரெதிராக வயது ஏறஏற அனுபவம் என்ற மெய் நம்மை நல்வழிக்கு இட்டுச் செல்கிறது. அந்தக் கட்டத்தில் நமது உடல் தளர்ந்து ரத்தத்தின் வேகமும் வெப்பமும் குறைந்து காணப்படும் பொழுது நாம் காணும் அனைத்தின்மீதும் அன்பு, கருணை, பாசம், பரிவு மிகுதியாகிறது.
அதுவரை நமக்குள் நிகழ்ந்த இரை தேடல் குறைந்து இறை தேடலில் மனம் லயிக்கின்றது. அந்தத் தேடலில் நமக்குள்ளான கோரிக்கை என்னவென்றால் உடல் ஆரோக்கியம், மன அமைதி, நீண்ட ஆயுள். காரணம் நமது உடல் தளர்வடையும்போது அதுவரை பயம் அறியாத காளையாக வலம் வந்த நமக்கு மரண பயம் என்பது தலைதூக்கும். அந்த பயம் நமது உடலில் மேலும் தளர்வை உண்டாக்கி மன அமைதியினை பின்னுக்கு தள்ளுகின்றது. அந்த மரண பயத்தின் ஞானத்தால் ஒரு ரமணர் நமக்கு கிடைத்தார். அவருக்கு ஞானம் கிடைத்ததின் காரணம் அவரது ஆத்ம விசாரம் மற்றும் அவருள்ளான இறை தேடலே. ஆனால். நம் பயம் நமக்கு ஞானத்தை தராமல் ஒருவித விரக்தியினைத்தான் தருகிறது. காரணம் நமது வாழ்கைப் பயணத்தில் இதுவரை நமது தேடலாக பணம், பதவி, பொருள், குடும்ப உறவுகள் என ஒரு சிக்கலான வெளிவரமுடியாத சிலந்தி வலைக்குள் சிக்குண்டதனால்தான். இருந்தாலும் நமது அந்திமகாலத்தில் ஏற்படும் குறைந்த பட்ச ஞானம் என்பது இன்னும் இந்த உலக மாயைகளை அனுபவிக்கவேண்டி ஆயுளை அதிகப்படுத்த இறைவனை வேண்டுகிறது.

எனவே, மரண பயம் தரும் தேடல் ஆயுள் நீடிப்பில் தொடங்குகிறது. அந்த ஆயுள் நீடிப்பினை வழங்கும் அதிகாரம் படைத்த ஒரே முதல்வன் அந்த ஈசன் என்பதை உணர்ந்து, ஈசன் அடி போற்றி!, எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! என நம்மை படைத்து காத்து ரட்சித்து வரும் நமசிவாய என்ற மூல மந்திரத்தை உணர்த்துவதோடு இந்த பிரபஞ்சத்தில் வாழும் உலக ஜீவராசிகள் அனைத்திற்குமான தலைவனை தேடுகிறது. அந்த தேடலில், எப்படி உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு சிறப்பு மருத்துவம் இருக்கின்றதோ அதுபோல நமது உயிர் தேடலுக்கு நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள சிறப்பு அவதார கடவுளை வழிபடுவது சிறப்பானது அன்றோ. அந்த வகையில் நமது ஆயுளை நீடித்து ஆரோக்கியத்தை தரும் முழுமுதற் கடவுளாக கோவை நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அன்னூர் செல்லும் பாதையில் கோவில்பாளையம் என்ற பகுதியில் அமைந்துள்ள காலகாலேஸ்வரர் பற்றிய வரலாற்றைக் காண்போம்.

கொங்குநாட்டு திருக்கடையூர் என்ற பெயர் பெற்ற இந்த கோயில் சுமார் 1700 ஆண்டுகள் பழமையானது என்று கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. சோழர் காலத்து கட்டிட வேலைப்பாடுடன் இந்த கோயில் அமைந்துள்ளது அதன் பழமையை பறைசாற்றுகின்றது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் கௌசிக நதிக்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பு. அனைத்து உயிர்களையும் அதன் ஆயுள் முடியும்போது கவர்ந்து செல்வதற்கான முழு அதிகாரம் படைத்தவர் எமதர்மராஜன் என்பது நாம் அறிந்ததே. அந்த எமதர்மராஜனே சிவனின் கோபத்திற்குள்ளாகி அந்தச் சாபம் போக்க இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் என்பதால் எமபயம் உள்ளவர்கள், இக்கோயிலில் அருள் புரியும் காலன் வழிபட்ட ஈஸ்வரனான காலகாலேஸ்வரனை வணங்கினால் தமது பாவங்கள் நீங்கி ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். எமனுக்கு சிவன் தந்த சாபம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வரலாற்றை புரட்டுவோம்.



ஒரு காலத்தில் மிருகண்டு முனிவருக்கும் அவரது தர்மபத்தினி மருதவல்லிக்கும் நெடுநாட்களாக குழந்தைப்பேறு இல்லாததால் சிவனை வேண்டி தவம் இயற்றினார் முனிவர். அவரது தவ வலிமையால் சிவன் முன்னே தோன்றி அவரது வேண்டுதலை ஏற்று குழந்தை வரம் நல்கினார். சிவனருளால் மருதவல்லிக்கு தெய்வக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டு வளர்த்து வந்தார்கள் அந்த தம்பதியினர். அறிவும் திருவும் வாய்க்கப்பெற்ற குழந்தை பிறக்கும். ஆனால், அந்தக் குழந்தைக்கு ஆயுள் பதினாறு வயதுவரை மட்டுமே என்ற சிவனின் கட்டளையினை ஏற்று மார்க்கண்டேயனை வளர்த்து வந்தனர். அறிவும் ஞானமும் நிறைந்த தெய்வக் குழந்தையாதலால் தமது பதினாறு வயதில் தனது ஆயுள் முடியப்போவதை உணர்ந்த மார்க்கண்டேயன் திருக்கடையூரில் வீற்றிருக்கும் அமிர்தகடேஸ்வரரை வணங்கி வந்தார்.
காலம் முடிவுற்றதை அறிந்து தனது கடமையைச் செய்ய எமன் வர, தன்னை கவர்வதற்கு எமன் வருவதை உணர்ந்த பதினாறு வயது பாலகன் சிவனை ஆலிங்கனம் செய்து தன்னுயிரைக் கவர வரும் எமனிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு வேண்டினான். ஆனால், கடமை தவறாத எமன் பாசக் கயிற்றை வீச, அது மார்க்கண்டேயனுடன் அவன் ஆலிங்கனம் செய்திருந்த சிவனின் மீது படர, கோபம் கொண்ட சிவன் தன் பக்தனையும் தன்னையும் பாசக்கயிற்றால் தீண்டிய எமனை சபித்து எட்டி உதைக்க, எமன் பூலோகத்தில் சாதாரண மனிதனாக வந்து சேர்ந்தார். அதனால் உலகில் இறப்பு தடைபட்டு பூமாதேவி பாரம் சுமக்க முடியாமல் வருந்தினாள். இந்த நிலையில் பூலோகம் வந்த எமன் கௌசிக நதிக்கரை வந்து தனது இழந்த சக்தியினை மீண்டும் பெற்று தனது கடமையினைச் செய்ய வேண்டி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய கற்பாறையினை தேடினார்.
கிடைக்காமல் போகவே, தனது கையில் உள்ள குச்சியினால் நதிக்கரையிலுள்ள மணலைத் தோண்ட, நதியிலிருந்து நுரை பொங்கி வர அந்த நுரையிலேயே லிங்கத் திருமேனியை அமைத்து வணங்க அருகில் தவமியற்றி வந்த விஸ்வாமித்ர முனிவர் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்துதர, அதன்படி எமன் வழிபட்டதனால் தான் பெற்ற சாபம் நீங்கி விண்ணுலகம் சென்றார் என்கிறது இத்தல வரலாறு. இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த பழமையான கோயிலில் இன்றளவும் உடல் ஆரோக்கியம் வேண்டியும், ஆயுள் வேண்டியும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் மற்றும் கனகாபிஷேகம் போன்ற நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருவது கண்கூடு. கோயிலுக்குள் நுழையும்முன் தீபஸ்தம்பம் நம்மை வரவேற்கின்றது. அதனைத் தாண்டி உள்ளே நுழைந்தால் சிறு மண்டபத்தில் நந்தியம் பெருமான் எழுந்தருளியிருக்கின்றார். அவரையும் வணங்கி உள்ளே மைய மண்டபத்தில் முக்கண்ணனாகிய காலகாலேஸ்வரர் லிங்க ரூபத்தில் நம்மை எதிர்கொள்கிறார். இந்த லிங்கம் நுரையினால் உருவாக்கப்பட்டதால் அபிஷேகம் கிடையாது.

கோயில் பிராகாரத்தைச் சுற்றி வலம் வரும்போது கன்னிமூலை கணபதி, மற்றும் கோஷ்டமூர்த்தியாக லிங்கோத்பவர் வீற்றிருக்கின்றனர். சுற்றி வரும்போது குரு தட்சிணாமூர்த்தி சந்நதி நம்மை பக்தியின் உச்சத்திற்கு அழைத்துச்செல்கிறது. காரணம் இந்த குருதட்சிணாமூர்த்தி தனது தலையில் லிங்கத்தை உடையவராக திகழ்கிறார். மேலும், ஆசியாவிலேயே பெரிய சிலாரூபம் என்ற சிறப்பு இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு உண்டு. குருப்பெயர்ச்சி காலங்களின் கூடும் பக்தர்களின் கூட்டத்தினை வைத்தே எவ்வளவு சக்திவாய்ந்த குரு என உணர முடிகின்றது. மேலும் குருப்பெயர்ச்சி காலங்களில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு இங்கு நடைபெறும் குரு பரிகார ஹோமங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவரை வணங்கி கடிகாரச் சுற்றில் வலம் வரும்போது தனிச் சந்நதியில் அம்மன் கருணாகரவல்லியை தரிசிக்கலாம். பெயருக்கேற்ப கண்களில் கருணை ததும்ப தன்னை நாடிவந்த பக்தர்களை அரவணைக்கின்றாள்.

பக்தர்களின் வேண்டுதல்களை கருணையுடன் கேட்டு அவர்களின் துயர்துடைக்க ஈசனைப் பணிக்கும் கருணாமூர்த்தியாக அவளது வடிவம் அன்பின் ஊற்றாக
அமைதியின் வடிவமாக பாசத்தின் பிரதிபலிப்பாக வடித்த சிற்பிக்கு அன்னையின் அருள் முழுமையாக கிடைத்திருப்பதை இந்த சிலாரூபம் உறுதிப்படுத்துகிறது.
 
சிவன் சந்நதிக்கும் அம்மன் சந்நதிக்கும் இடையில் சுப்பிரமணியர் சந்நதி நம்மை வசீகரிக்கிறது. காரணம் அழகன் முருகனின் புன்னகை தவழும் உதடு நம்மை வாழ்த்துவது போலவே உள்ளது. இந்த முருகன் காலசுப்ரமணியர் என்ற பெயருடன் சோமாஸ்கந்தராக வீற்றிருக்கிறார். தீபாவளி முடிந்த வாரத்தில் இவருக்கு எடுக்கப்படும் சூரசமஹாரா விழாவினை காணக் கண்கோடி வேண்டும். அவ்வளவு சிறப்பு. அதுமட்டுமில்லாமல் இங்கு தனிச் சந்நதியில் நஞ்சுண்டேஸ்வரர் வீற்றிருக்கிறார். பக்தர்கள் தமக்கு நிகழும் விஷக் கடி போன்ற பிரச்னைகளுக்கு இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து பலன் பெறுகிறார்கள். மேலும், இங்கு நவகிரகங்களுக்கு சந்நதியும், சூரிய, சந்திரர்களுக்கு தனிச் சந்நதியும் அமைந்திருக்கிறது. கோவையில் இருந்து அன்னூர் செல்லும் நகர பேருந்தில் சென்றால் கோவில்பாளையம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
ஆயுள் கூட்டி ஆரோக்யமருளும் காலகாலேஸ்வரர்!



கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 209) கோயம்புத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கோவில்பாளையம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது...இங்குவணங்கி பெரு வாழ்வுபெறுவோம்.ஸ்ரீ லோபாமுத்திரை ஸ்ரீ அகத்தியர், 18 சித்தர்கள் பூஜித்த இந்த திருத்தலத்தில் இறைவனை வணங்குவோம்.


No comments:

Post a Comment

Trending