agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Tuesday, March 27, 2018

சித்தம் உணர சேர்மன் அருணாசல சுவாமி கோயில் - 110 ஆம் ஆண்டு குரு பூஜை விழா அழைப்பிதழ்

பரம் பொருள் உணர்த்தும் உயிர்நிலைக் கோயில்கள் நம் நாடு முழுதும் பரவி கிடக்கின்றது. குறிப்பாக நம் தமிழ் நாட்டில் சொல்லவே வேண்டாம். கால் வைக்கும் இடமெல்லாம் சித்தர்களின் ராஜ்ஜியம் தான். ஆனால் நமக்குத் தான் உண்மை நிலை புரிவதும் இல்லை, தெரிவதும் இல்லை.

அந்த வகையில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பற்றி குறிப்பாக இங்கே காணலாம். எப்போ அழைப்பாரோ? என்று நாம் காத்திருக்கின்றோம். ஏனெனில் சக்கரை அம்மா ஜீவ சமாதி பற்றியும், குருபூஜை பற்றியும் நம் தளத்தில் பகிர்ந்தோம். ஆனால் அன்றைய தினம் தீர்த்தமலை சென்று வர இறைவன் பணித்தான். மீண்டும் எப்போது வாய்ப்பு கிடைக்குமோ? என்று ஏங்கிய போது, சென்ற வாரம் சென்று தரிசித்தோம். உயிர்நிலை கோயிலின் உண்மை புரிந்தது. நம்மை தாண்டி அன்னையின் ஆற்றல் நம்முள் புகுவது கண்டோம். புருவ மத்தியில் நினைவை செலுத்து, துரியத்தில் மனம் வை என்றெல்லாம் நாம் நினைக்க வேண்டாம். இவையெல்லாம் இங்கு தானாகவே நடைபெறுகின்றது. மேலும் அங்கே சத்சங்கம் நடந்து கொண்டிருந்தது. இது போல் அனைத்து கோயில்கள்,ஜீவசமாதிகள் முழுதும் சத்சங்கம் நடைபெற்று, நாம் புத்துயிர் பெற வேண்டும், சரி..சேர்மன் அருணாசல சுவாமி பற்றி அறிவோம்.


சேர்மன் அருணாச்சல சுவாமிகள் கோயில் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள ஒரு வழிபாட்டு மற்றும் சமாதிக் கோயில் ஆகும். இங்கு சேர்மன் அருணாசல சுவாமி என்பவரின் சமாதி அமைந்துள்ளது.



சேர்மன் அருணாசலம் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி நாடாருக்கும் சிவனனைந்த அம்மையாருக்கு 1880, அக்டோபர் 2ல் பிறந்தார். சிறுவயதிலேயே யோகக்கலை பயின்றார். 1906, செப்டம்பர் 5 முதல் 1908, ஜூலை 27 வரை ஏரல் நகராட்சித் தலைவராக (சேர்மன்) இருந்தார். இதனால் "சேர்மன் அருணாசலம்' என்று அழைக்கப்பட்டார்.



சேர்மன் அருணாச்சலம் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனிடம் தன் மரணத்தைச் சொன்னார். அதன்படி, 1908, ஜூலை 28 அன்று ஆடி அமாவாசை நாளில் பகல் 12 மணிக்கு சமாதியானர். ஏரலுக்குத் தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரை ஓரமாக இருந்த ஆலமரத்தின் அருகில் தன்னை சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடும்படி தம்பியிடம் சொன்னார். அவர் கூறியபடியே அவரது தம்பியும் செய்தார். அவரது சமாதியிடம் இன்று கோயிலாக உள்ளது.



ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார் என்கிற நம்பிக்கையில் இக்கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள். இந்தக் கோயிலில் பிரசாதமாக கோயில் திருமண்ணும், தண்ணீரும் தருகிறார்கள்.




                       ஆடி அமாவாசை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா .  ஆடி அமாவாசையன்று இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மன் திருக்கோலத்தில் எழுந்தருளுவார்.




இதோ. 110 ஆண்டு  குரு பூஜை விழா அழைப்பிதழ்  இங்கே இணைத்துளோம். அனைவரும் கலந்து கொண்டு அருள் பெறுக.


மேலும் இந்த ஆண்டு முழுதும் நடைபெற உள்ள விழாக்களையும் இங்கே இணைப்பாக தருகின்றோம்.


ஏரல்  சேர்மன் அருணாசல சுவாமிகளின் திருவடி போற்றி வணங்குகின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.





No comments:

Post a Comment

Trending