agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Friday, February 16, 2018

போகர்-2




போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார். போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை என்று கருதப்படுகின்றன.
பழநி முருகன் சிலைதொகு
பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. இச் சிலை நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச் சிலை என்று கருதப்படுகிறது. இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதி‌ல்லை. நவ பாசான சிலை சேதமடைய காரணம் சிலையின் பாடாணம் மருத்துவக் குணமுள்ளதால், பூசை செய்பவர்கள் சிலையைச் சுரண்டி சித்த மருத்துவர்களுக்கும் பிறருக்கும் பணத்திற்கு விற்றதாக பரவலாகப் பேசப்படுகிறது.
போகர் நூல்கள்தொகு
போகர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.
போகர் 12000போகர் 7000 (சப்த காண்டம்)ஜெனன சாகரம் 550நிகண்டு 1700வைத்தியம் 1000சரக்குவைப்பு 800செனன சாகரம் 550கற்பம் 360உபதேசம் 150இரணவாகமம் 100ஞானசாராம்சம் 100கற்ப சூத்திரம் 54வைத்திய சூத்திரம் 77முப்பு சூத்திரம் 51ஞான சூத்திரம் 37அட்டாங்க யோகம் 24பூசா விதி 20
'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' (ஆசிரியர்- எஸ்.சந்திரசேகர்) என்ற விளக்க நூலை லியோ புக்ஸ்-சென்னை, வெளியிட்டுள்ளது. இந்நூலில் மொத்தம் ஏழு காண்டங்களுக்கு சுருக்கமான பொருளுரை உள்ளது. இதன் விலை ரூ.120/- போகர் 7000 பாடல்கள் சப்தகாண்டம்
'போகர் ஜெனன சாகரம்' (ஆசிரியர்- எஸ்.சந்திரசேகர்) என்ற விளக்க நூலை கற்பகம் புத்தகாலயம், தி.நகர்,சென்னை, வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.60/-
'அதிசய சித்தர் போகர்' (ஆசிரியர்- எஸ்.சந்திரசேகர்) என்ற நூலை கற்பகம் புத்தகாலயம், தி.நகர்,சென்னை, வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.120/-

No comments:

Post a Comment

Trending